இந்தியா

“விளையாட்டுத்துறை முன்னேற்றத்திற்கான எந்த திட்டமும் இல்லை”: விளையாட்டு வீரர்களுக்கு வேட்டு வைத்த பட்ஜெட்!

கொரோனா காரணமாக விளையாட்டு போட்டிகளும், வீரர்களுக்குமான பயிற்சிகள் தடைபட்ட நிலையில், ஒதுக்கப்பட்ட ரூ.2,800 கோடி தொகை மறுபரிசீலனை செய்யப்பட்டு, ரூ.1,800 கோடியாக குறைக்கப்பட்டுவிட்டது.

“விளையாட்டுத்துறை முன்னேற்றத்திற்கான எந்த திட்டமும் இல்லை”: விளையாட்டு வீரர்களுக்கு வேட்டு வைத்த பட்ஜெட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

2021-22 ம் ஆண்டுக்கான Budget நேற்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. துறைவாரியாக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகைகள் குறித்தும் திட்டங்கள் குறித்தும் அந்தந்த துறைசார்ந்த வல்லுநர்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கிற நிலையில் விளையாட்டுத்துறைக்கு எவ்வளவு பட்ஜெட் ஒதுக்கப்படிருக்கிறது? ஏதேனும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறதா?

நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று, பட்ஜெட் தாக்கல் செய்தபோது, விளையாட்டுத் துறைக்காக 2596.14 கோடி ரூபாய் ஒதுக்கப்படிருப்பதாக அறிவித்திருந்தார். இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையை விட 8.16% குறைவான தொகை. கடந்த ஆண்டு ஃபிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், விளையாட்டுத்துறைக்கு 2826.92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு இதைவிட 230.78 கோடி ரூபாய் குறைக்கப்பட்டு 2596.14 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

“விளையாட்டுத்துறை முன்னேற்றத்திற்கான எந்த திட்டமும் இல்லை”: விளையாட்டு வீரர்களுக்கு வேட்டு வைத்த பட்ஜெட்!

கொரோனா நெருக்கடிகளிலிருந்து விளையாட்டுலகம் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு நிறைய பொருட்செலவு ஆகும். இந்நேரத்தில் Budget தொகை குறைவாக அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமாகவே பார்க்கப்படுகிறது. இதை சிலர் வேறு கோணத்திலும் விவரிக்கிறார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக விளையாட்டு போட்டிகளும், வீரர்களுக்குமான பயிற்சிகள் தடைபட்ட நிலையில், ஒதுக்கப்பட்ட ரூ.2,800 கோடி தொகை மறுபரிசீலனை செய்யப்பட்டு, ரூ.1,800 கோடியாக குறைக்கப்பட்டுவிட்டது. எனவே, 700 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகமாகத்தான் விளையாட்டுத்துறைக்கு பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்கின்றனர். இந்த விளக்கத்தில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை.

போட்டிகளே நடைபெறாத ஆண்டில் ஒதுக்கப்பட்ட தொகைக்கும், முழு வீச்சில் மீண்டெழுந்து போட்டிகள் நடைபெறப் போகும், அதுவும் ஒலிம்பிக்கை எதிர்கொள்ள இருக்கும் ஆண்டில் ஒதுக்கப்படும் பட்ஜெட்டுக்கும் எப்படி முடிச்சு போட முடியும்? இளம் விளையாட்டு வீரர்களுக்காக நடத்தப்படும் Khelo India திட்டத்திற்கு கடந்த ஆண்டு 890.42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டு 657.71 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

“விளையாட்டுத்துறை முன்னேற்றத்திற்கான எந்த திட்டமும் இல்லை”: விளையாட்டு வீரர்களுக்கு வேட்டு வைத்த பட்ஜெட்!

ஒரு சில பாசிட்டிவ் விஷயங்களும் பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கிறது. Sports Authority Of India–வுக்கு 660 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த முறை இதற்கு ரூ.500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. National Sports Federation க்கு 280 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த முறை இதற்கு 235 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. வீரர்களுக்கான ஊக்கத்தொகை வழங்குவதற்கு ஒதுக்கப்படும் தொகை 53 கோடியிலிருந்து 70 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

ஆண்டுதோறும் விளையாட்டுத்துறைக்கான பட்ஜெட்டில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை. ஒரு திட்டத்திற்கு நிதி கூடுதலாக வழங்கப்பட்டிருந்தால் இன்னொரு திட்டத்தில் மொத்தமாக குறைத்து அதை சரி செய்துவிடுகிறார்கள்.

விளையாட்டுக்காக, இந்தியா ஒரு நாளில் செலவளிக்கும் தொகையை விட சீனா ஒரு நாளில் 200 மடங்கு அதிகம் செலவளிப்பதாக 2018–ல் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட ஒரு புள்ளிவிவரம் மூலம் தெரியவந்தது. ஆனாலும், இன்னமும் விளையாட்டுக்கான Budget உயர்த்தப்படவில்லை. இந்த பட்ஜெட் அறிவிப்புகள் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் வீரர்களின் பயிற்சியில் பாதிப்பை ஏற்படுத்தாது. அவர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என அரசு தரப்பில் விளக்கம் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories