இந்தியா

மம்தா பானர்ஜி பேச வரும்போது ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்ட பா.ஜ.க-வினர் : மேடையிலேயே எதிர்வினையாற்றிய மம்தா!

“அரசு விழாவுக்கென்று தனி மரியாதை இருக்கவேண்டும். விழாவில் பங்கேற்க அழைத்துவிட்டு யாரையும் அவமரியாதை செய்யக்கூடாது” எனத் தெரிவித்தார் மம்தா பானர்ஜி.

மம்தா பானர்ஜி பேச வரும்போது ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்ட பா.ஜ.க-வினர் : மேடையிலேயே எதிர்வினையாற்றிய மம்தா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொல்கத்தாவில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழாவில், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என பா.ஜ.க-வினர் முழக்கமிட்டதால் மம்தா பானர்ஜி விழாவில் பேச மறுத்துள்ளார்.

நோதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் ‘பராக்கிரம திவாஸ்’ ஆகக் கொண்டாடப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.

இதுகுறித்து மேற்கு வங்க அரசுடன் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு முடிவெடுத்துவிட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற ‘பராக்கிரம திவாஸ்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உரையாற்ற மேடைக்கு வந்தபோது கூட்டத்தில் இருந்தரவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டனர்.

இதனால் அதிருப்தியடைந்த மம்தா பானர்ஜி, “இது அரசியல் நிகழ்ச்சி அல்ல; அரசு விழா. அரசு விழாவுக்கென்று தனி மரியாதை இருக்கவேண்டும். விழாவில் பங்கேற்க அழைத்துவிட்டு யாரையும் அவமரியாதை செய்யக்கூடாது. இதற்கு எதிர்வினையாக நான் இப்போது எதுவும் பேசப் போவதில்லை. ஜெய்ஹிந்த்! ஜெய் வங்காளம்!” எனக் கூறிவிட்டு விழாவில் பேச மறுத்துச் சென்றார்.

banner

Related Stories

Related Stories