இந்தியா

ஜனவரி 29ல் தொடங்குகிறது 2021-22க்கான பட்ஜெட் கூட்டம்.. பிப்.,1ல் தாக்கலாகிறது பொது பட்ஜெட்!

நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 29ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 29ல் தொடங்குகிறது 2021-22க்கான பட்ஜெட் கூட்டம்.. பிப்.,1ல் தாக்கலாகிறது பொது பட்ஜெட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசின் அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன. அதில், “வருகிற ஜனவரி 29ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்.

முதல் நாள் கூட்டம் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி தொடங்கி வைக்க இருக்கிறார். பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணியளவில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இதனையடுத்து பட்ஜெட் மீதான விவாதிக்க கூட்டத்தொடரின் முதல் பாதி பிப்ரவரி 15ம் தேதியுடன் நிறைவடைகிறது. இரண்டாம் பாதி மார்ச் 8ம் தேதி தொடங்கும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories