இந்தியா

பாலக்கோட் விமானத் தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டதாக பொய் பிரச்சாரம் செய்த முன்னணி ஊடகங்கள்! #FactCheck

பாலக்கோட் விமான தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டதை பாகிஸ்தான் உறுதி செய்ததாக வட மாநில ஊடகங்கள் வெளியிட்ட செய்தி பொய்யானது என பூம் இணையதளம் ஆய்வு செய்து தெரிவித்துள்ளது.

பாலக்கோட் விமானத் தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டதாக பொய் பிரச்சாரம் செய்த முன்னணி ஊடகங்கள்! #FactCheck
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பயணித்த பேருந்து மீது, வெடிமருந்துடன் தீவிரவாதி ஒருவன் மோதி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினான். இதில் 44 இந்திய வீரர்கள் மரணமடைந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை, பாகிஸ்தான் எல்லையான பாலக்கோட்டில் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது. இதில் 300 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வந்தது.

இந்நிலையில், பாலக்கோட் விமானத் தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டதை பாகிஸ்தான் உறுதி செய்ததாக வடமாநில ஊடகங்கள் வெளியிட்ட செய்தி பொய்யானது என பூம் இணையதளம் ஆய்வு செய்து தெரிவித்துள்ளது.

பாலக்கோட் விமானத் தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டதாக பொய் பிரச்சாரம் செய்த முன்னணி ஊடகங்கள்! #FactCheck

கடந்த 9ம் தேதி முன்னணி ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று, பாலக்கோடு தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டதாகவும், அதனை பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரியே வீடியோவில் கூறியுள்ளதாகவும் கூறி செய்தி ஒன்றை வெளியிட்டது.

அந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு, 22க்கும் மேற்பட்ட முன்னணி செய்தி நிறுவனங்கள் அதே செய்தியை வெளியிட்டுள்ளன. மேலும் அந்தச் செய்திகளில், ஜாஃபர் ஹிலாலி என்ற முன்னாள் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அதிகாரி 300 பேர் கொல்லப்பட்டது தொடர்பாகப் பேசியதாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

மேலும் அந்த வீடியோ, ஹம் நீயூஸ் (HUM News) என்ற தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் ஜாஃபர் ஹிலாலி பேசுவதாக வருகிறது. அந்த வீடியோவில், “உங்கள் இலக்கு ஒரு மதரசாவைத் தாக்குவது. அதில், 300 பேர் படித்து வந்ததாக நீங்கள் சொன்னீர்கள். அங்கு தாக்குதல் நடத்துவதாகச் சொன்னீர்கள். அதாவது, நீங்கள் 300 பேரைக் கொல்லத் திட்டமிட்டிருந்தீர்கள்.

அங்கு யாரும் அப்படி இல்லை. அப்படி நடக்கவில்லை. அதற்குப் பதிலாக நாங்கள் (இந்திய போர் விமானங்கள்) ஒரு கால்பந்து மைதானத்தைத் தாக்கினோம். அவர்கள் 300 பேரை கொல்லத் திட்டமிட்டிருந்தார்கள். அது நடவடிக்கை என்பதால் வெறும் மைதானத்தைக் தாக்கினார்கள். யாமே கொல்லப்படவில்லை, பறவைகளும் 11 மரங்களும் தான் கொல்லப்பட்டன” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த வீடியோவை மோசடியாக சித்தரிக்கும் வகையில், வீடியோவை வெட்டி ஒட்டி பொய் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த வீடியோவில் விவாதத்தில் பங்கேற்பவர்களின் இடங்கள் மாறியுள்ளன. அதேபோல் பிரதமர் மோடியும் இந்திய இராணுவ உடையில் இருப்பதாகவும் அது ஒரிஜினல் வீடியோ இல்லை என்றும் பூம் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து ஜாஃபர் ஹிலாலி, தான் 300 பேர் கொல்லப்பட்டதாக சொல்லவில்லை என்றும், இந்திய அரசு நான் டி.வியில் பேசிய வீடியோவை வெட்டி ஒட்டி பொய் பிரச்சாரம் செய்வதன் மூலம், அவர்கள் செய்யத் தவறியதை நிரூபிக்க முயல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories