இந்தியா

1000க்கணக்கான வாகனங்களில் டெல்லிக்கு புறப்பட்ட பஞ்சாப் விவசாயிகள்.. 33வது நாளாக தீவிரமடையும் போராட்டம்!

ஹரியானா மாநிலத்தில் இருந்து டெல்லி நோக்கி செல்லக்கூடிய சாலைகள் அனைத்திலும் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டம் தொடர்ந்து நீடிக்கும்.

 1000க்கணக்கான வாகனங்களில் டெல்லிக்கு புறப்பட்ட பஞ்சாப் விவசாயிகள்.. 33வது நாளாக தீவிரமடையும் போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மோடி அரசால் இயற்றப்பட்டுள்ள விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராஜ் என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளின் போராட்டம் 33வது நாளை எட்டியுள்ளது.

டெல்லியில் நிலவும் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது, வாழ்வாதாரம் வேண்டி ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு இதுகாறும் மத்திய மோடி அரசு செவிசாய்க்காது இருந்து வருகிறது.

இதனால் பல்வேறு வழிகளில் விவசாயிகள் தங்களது போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் இருந்து டெல்லி நோக்கி செல்லக்கூடிய சாலைகள் அனைத்திலும் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டம் தொடர்ந்து நீடிக்கும் என தெரிவித்துள்ள விவசாயிகள், வரிவசூல் இல்லாமல் வாகனங்கள் செல்ல தொடர்ந்து அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், மூன்று நாள் சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டத்தை தற்போது காலவரையறையற்ற முற்றுகை போராட்டமாக மாற்றி உள்ளனர். நாளை (டிச.,29) பேச்சுவார்த்தைக்கு தயார் என்று விவசாயிகள் கூறியுள்ள சூழ்நிலையில் மத்திய அரசிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான அழைப்பு வரவில்லை என்று விவசாயிகள் சங்கங்கள் கூறியுள்ளன.

இதனிடையே நாளை தஞ்சை மற்றும் பாட்னாவில் பிரமாண்ட விவசாயிகள் பேரணி நடத்த உள்ளதாகக் கூறியுள்ளனர். நாளை மறுநாள் மணிப்பூர் மற்றும் ஹைதராபாத்தில் பிரமாண்ட பேரணி நடைபெறும் என்றும் அகில இந்திய விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு கூறியுள்ளது.

அன்று டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ட்ராக்டர் பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாவிட்டால் ஜனவரி 1ஆம் தேதி போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories