இந்தியா

”பா.ஜ.கவை விட பெரிய திருடர்கள் யாரும் இல்லை.. NRC பட்டியலிருந்து 19 லட்சம் பேர் நீக்கம்” : மம்தா பானர்ஜி

“உண்மையில் பாஜகவை விட பெரிய திருடர்கள் யாரும் கிடையாது; அவர்களே மிகப் பெரிய கொள்ளைக்காரர்கள்” என மேற்கு வங்கம் மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றச்சாட்டியுள்ளார்.

”பா.ஜ.கவை விட பெரிய திருடர்கள் யாரும் இல்லை.. NRC பட்டியலிருந்து 19 லட்சம் பேர் நீக்கம்” : மம்தா பானர்ஜி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தற்போது இருந்தே தேர்தல் பணிகளை துவங்கியுள்ள பா.ஜ.க, தனது கட்சியின் முக்கிய தலைவர்களை அடிக்கடி மேற்கு வங்க மாநிலத்திற்கு அனுப்பி ஆய்வு பணிகளை மேற்கொண்டுவருகிறது.

குறிப்பாக கலவரங்கள் மூலம் ஆட்சியைக் கைபற்றும் நோக்கில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பா.ஜ.கவின் முயற்சிகளை, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி முன்னின்று எதிர்த்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் மேற்கு வங்கம் சென்ற பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகன அணிவகுப்பு மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன.

இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த தாக்குதல் பின்னணியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இருப்பதாக பா.ஜ.க தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் இந்த காரணங்களைக் கொண்டு மேற்கு வங்க அரசுக்கு பல்வேறு நெருக்கடியை மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து கொடுத்து வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு மீது அம்மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றச்சாட்டியுள்ளார். நேற்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி, “நாங்கள் மேற்கு வங்க மக்களுக்காகப் பணியாற்றி வருகிறோம். எங்களை பா.ஜ.க திருடர்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் உண்மையில் பாஜகவை விட பெரிய திருடர்கள் யாரும் கிடையாது; அவர்களே மிகப் பெரிய கொள்ளைக்காரர்கள்.

இந்து, முஸ்லிம், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் என மக்களிடையே இடையே வேறுபாட்டை ஊக்குவித்து ஆதாயம் தேடுவார்கள். இதைத்தான் இப்போது மேற்கு வங்கத்திலும் அவர்கள் செய்வார்கள். குறிப்பாக, தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை நாம் வழுவாக எதிர்த்து உள்ளோம்.

ஆனாலும் தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் இருந்து இதுவரை 19 லட்சம் வங்காளிகளின் பெயரை நீக்கியுள்ளது மோடி அரசாங்கம். மேற்கு வங்காளத்தில் அகதி காலனிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளன. எனவே, தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து யாரும் அச்சமடைய தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories