இந்தியா

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்காக பதவியை ராஜினாமா செய்த பஞ்சாப் சிறைத்துறை டி.ஐ.ஜி!

அரசு பணியில் இருப்பதால் என்னால் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளிக்க முடியாது. ஆகவே முன்கூட்டியே ஓய்வு பெற்றதாகக் கூறி தன்னை பணியில் இருந்து விடுவியுங்கள் எனக் கேட்டு மாநில உள்துறை செயலாளருக்கு கடிதம்

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்காக  பதவியை ராஜினாமா செய்த பஞ்சாப் சிறைத்துறை டி.ஐ.ஜி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அரசு துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது போன்று விவசாயத்தையும் பெரு நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கும் வகையில் மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 18 போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், முதலமைச்சர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்காக  பதவியை ராஜினாமா செய்த பஞ்சாப் சிறைத்துறை டி.ஐ.ஜி!

அவ்வகையில், பஞ்சாப் மாநிலத்தின் சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்த லக்மிந்தர் சிங் ஜக்கர் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக மாநில உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாய சகோதரர்களுக்கு ஆதரவாக நிற்கவேண்டும்.

நீண்ட நாட்களாக விவசாயிகள் அமைதியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். எவரும் அவர்களது குரலை கேட்கவில்லை. அரசுப்பணியில் இருப்பதால் என்னால் அவர்களது போராட்டத்துக்கு ஆதரவளிக்க முடியாது. ஆகவே முன்கூட்டியே ஓய்வு பெற்றதாகக் கூறி தன்னை பணியில் இருந்து விடுவியுங்கள் எனக் கூறியுள்ளார்.

மேலும். ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள லக்மிந்தர் சிங், இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தெரிவித்திருக்க வேண்டும். இல்லையே இன்றே பதவி விலக வேண்டுமானால் 3 மாதத்துக்கான ஊதியத்தை திருப்பியளிக்க வேண்டும். ஆகையால் ஊதியத்தை திருப்பியளிக்க தயாராக உள்ளேன்.

நான் தற்போது அதிகாரியாக இருப்பதற்கு முழு முதற்காரணம் என்னுடைய தந்தை விவசாயியாக இருந்து என்னை ஆளாக்கினார். அது குறித்து நான் பெருமைப்படுகிறேன். ” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டெல்லி எல்லைகளில் நாளை (டிச,.14) அனைத்து போராட்ட இடங்களிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். அதற்கு ஆதரவு தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தானும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories