இந்தியா

தாங்கள் சாப்பிடவிருந்த உணவுத் தட்டை தொட்ட தலித் இளைஞரை அடித்துக்கொன்ற ஆதிக்க சாதியினர்!

மத்திய பிரதேசத்தில் தாங்கள் சாப்பிட இருந்த உணவுத் தட்டைத் தொட்ட தலித் இளைஞரை, ஆதிக்க சாதியைச் சார்ந்த இருவர் அடித்துக் கொன்றுள்ளனர்.

தாங்கள் சாப்பிடவிருந்த உணவுத் தட்டை தொட்ட தலித் இளைஞரை அடித்துக்கொன்ற ஆதிக்க சாதியினர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், விருந்தில் வைக்கப்பட்டிருந்த உணவைத் தொட்ட 25 வயது தலித் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கிஷான்பூர் கிராமம். கடந்த டிசம்பர் 7ம் தேதி இந்த கிராமத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விருந்து முடிந்தபின் சுத்தம் செய்வதற்காக தேவராஜ் அனுராகி என்ற தலித் இளைஞர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். விருந்தில் வைக்கப்பட்டிருந்த உணவை தேவராஜ் அனுராகி சாப்பிட்டதை கண்ட பூரா சோனி, சந்தோஷ் பால் ஆகிய ஆதிக்கசாதியைச் சார்ந்தவர்கள் தேவராஜை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலிஸ் எஸ்.பி சச்சின் சர்மா கூறுகையில், தேவராஜை தாக்கிக் கொன்ற பூரா சோனி, சந்தோஷ் பால் இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories