இந்தியா

7வது நாளாக ஸ்தம்பிக்கும் டெல்லி: போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் தீவிரமடையும் போராட்டம் !

மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய முதல் நாள் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், ஏழாவது நாளாக போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

7வது நாளாக ஸ்தம்பிக்கும் டெல்லி:  போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் தீவிரமடையும் போராட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

மோடி அரசின் வேளாண் விரோத கொள்கைகளை எதிர்த்து உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி எல்லையான ஷிங்கு, திக்ரி, ஹாசிபூர், நோய்டா பகுதிகளில் விவசாயிகள் தொடர்ந்து இரவு பகலாக சாலைகளில் போராட்டங்களத் தொடர்ந்துவருகிறார்கள். இதனால் டெல்லிக்கு வரும் பெரும்பாலான சாலைகள் மூடப்பட்டுள்ளன.

டெல்லி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மேலும் பல மாநிலங்களில் போராட்ட அறிவிப்பை விவசாய அமைப்புகள் வெளியிட்டுள்ளன. மத்திய பிரதேச விவசாயிகள் நாளை கார்ப்பரேட் எதிர்ப்பு தினமாக கடைபிடித்து போராட்டம் நடத்த உள்ளனர்.

7வது நாளாக ஸ்தம்பிக்கும் டெல்லி:  போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் தீவிரமடையும் போராட்டம் !

இதனை மத்திய பிரதேச ஆல் இந்தியா கிசான் சங்கம் ஒருங்கிணைப்பு குழு பிரிவி அறிவித்துள்ளது. இதில் 250க்கும் மேற்பட்ட சங்கங்கள் உள்ளன. மூன்று சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

அதேபோன்று ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதேபோன்று உத்தர பிரதேச மாநிலத்தில் ராஷ்டிரிய லோக் தல் கட்சி நாளை விவசாயிகளுக்கு எதிரான மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி நாளை மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தவுள்ளது.

உ.பி.மாநிலத்தில் நெல்லுக்கு 1,900 ரூபாய் குவிண்டாலுக்கு ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகளிடம் 1,100 ரூபாய்க்கு தான் கொள்முதல் செய்யப்படுகிறது என்று அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அஜித்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

7வது நாளாக ஸ்தம்பிக்கும் டெல்லி:  போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் தீவிரமடையும் போராட்டம் !

ஹரியானாவில் என்.டி.ஏ கூட்டணி கட்சியான சவுதாலாவின் ஜெ.ஜெ.பி கட்சி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையை ஏன் வேளாண் சட்டத்தில் சேர்க்க கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் தமிழகத்தில் இடதுசாரிகள் கட்சி அனைத்தும் டிசம்பர் 4ம் தேதி முதல் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தை தொடர்ப்போவதாக அறிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories