இந்தியா

“டெல்லியில் அபாய கட்டத்தை எட்டிய காற்றின் தரம்” : காற்று மாசுபாட்டை உணராமல் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்?

டெல்லியில் பட்டாசு விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடைமீறி பட்டாசு விற்பனை மற்றும் வெடித்ததாக இதுவரை 50க்கும் மேற்பட்டோரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

டெல்லியில் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டு உள்ளது. கடந்த சில நாட்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 346 ஆக இருந்தது. இது மிகவும் மோசமான நிலை ஆகும். காற்றின் தரக்குறியீடு 50 வரை இருந்தால் மட்டுமே அது நல்ல நிலை. காற்றில் மாசுவின் அளவை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக, வரும் 7 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகள் வெடிக்க தடை விதிப்பதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்றின் தரம் மோசமாகி வருவது பொதுமக்களுக்கு சுவாச பிரச்சினைகளை ஏற்படும் நிலையில் தடைமீறி பட்டாசு விற்பனை மற்றும் வெடித்ததாக 50க்கும் மேற்பட்டோரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

“டெல்லியில் அபாய கட்டத்தை எட்டிய காற்றின் தரம்” : காற்று மாசுபாட்டை உணராமல் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்?

தீபாவளி நாளான இன்று பல இடங்களில் சட்ட விரோதமாக தடையை மீறி பட்டாசு விற்பனை செய்தவர்களை போலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 85.33 கிலோ பட்டாசுகள் கைப்பற்றப்பட்டன.

மேலும் பட்டாசு வெடித்ததாக 6 பேரையும், பட்டாசு விற்பனை செய்ததாக 40க்கும் மேற்பட்டோரை போலிஸார் கைது செய்துள்ளனர். இதனால் பல இடங்களில் காற்றின் தரம் என்பது அபாய கட்டத்தை எட்டியுள்ளதால், டெல்லி முழுவதும் இயந்திரங்கள் மூலம் உயர் கட்டிடங்கள் மற்றும் மரங்களில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories