இந்தியா

டெல்லியில் 3-வது அலை தீவிரம்: முதல் முறையாக ஒரே நாளில் 7,178 பேர் பாதிப்பு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை !

டெல்லியில் மூன்றாவது அலை தீவிரம் காரணமாக நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

டெல்லியில் 3-வது அலை தீவிரம்: முதல் முறையாக ஒரே நாளில் 7,178 பேர் பாதிப்பு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டெல்லியில் குளிர் மற்றும் காற்று மாசு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா மூன்றாவது அலை வீசி வருகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது.

நேற்று இரவு டெல்லி அரசு வெளியிட்ட கணக்குப்படி, 7178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 64 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 40 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 9 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 4 லட்சத்து 23 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6833 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் முதல் அலை உச்சத்தில் எட்டிய ஜூன் மாதம் அதிகபட்ச தினசரி பாதிப்பு 3900 ஆக பதிவானது. இரண்டாவது அலை வீசிய செப்டம்பர் மாதம் 4500 ஆக உயர்ந்தது. தற்போது மூன்றாவது அலையின் போது முதல் முறையாக நேற்றைய பாதிப்பு 7178 ஆக உயர்ந்திருக்கிறது.

டெல்லியில் 3-வது அலை தீவிரம்: முதல் முறையாக ஒரே நாளில் 7,178 பேர் பாதிப்பு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை !

இந்த நிலை நீடித்தால் டிசம்பர் மாதத்தில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, பண்டிகை காலங்களில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories