இந்தியா

PUBG கேம்களை மறைமுக சர்வர் மூலமும் இனி விளையாட முடியாது - இந்தியாவில் இன்று முதல் முற்றிலுமாக தடை!

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இந்தியாவில் பப்ஜி செயலி 17.5 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

PUBG கேம்களை மறைமுக சர்வர் மூலமும் இனி விளையாட முடியாது - இந்தியாவில் இன்று முதல் முற்றிலுமாக தடை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலகளவில் பப்ஜி கேம் 60 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தவிளையாட்டை 5 கோடி பேர் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இந்தநிலையில் இந்தியாவில்தான் அதிகபட்சமான பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுளன. குறிப்பாக இந்தியாவில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் இந்த விளையாட்டு மிகவும் பிரபலமானது. இந்த கொரோனா ஊரடங்கு காலத்திலும் இந்தியாவில் பப்ஜி மேம் 17.5 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இந்தியப் பயனர்களைப் பூர்த்தி செய்யும் அனைத்து PUBG மொபைல் சேவையகங்களும் அக்டோபர் 30 (இன்று) முதல் முற்றிலும் நிறுத்தப்படுகிறது என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் iOS ஆப் ஸ்டோரில் PUBG மொபைல் ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ளது.

எனவே பிளே ஸ்டோரில் பப்ஜி நீக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கும் இன்று முதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், பப்ஜி உள்ளிட்ட 117 சீன செயலிகள் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. முன்னதாக ஜூன் மாதம், டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளும், ஜூலை மாதம் 47 செயலிகளும் தடை செய்யப்பட்டன.

PUBG கேம்களை மறைமுக சர்வர் மூலமும் இனி விளையாட முடியாது - இந்தியாவில் இன்று முதல் முற்றிலுமாக தடை!
PC

இதனையடுத்து, இந்தியாவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள பப்ஜி மொபைல் கேம், ரைஸ் ஆஃப் கிங்டம்ஸ், கேரம் ஃப்ரண்ட்ஸ் உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்குத் தடை விதித்து மத்திய அரசு திடீர் உத்தரவு பிறப்பித்தது.

நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன என்று இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் தெரிவித்தது.

PUBG கேம்களை மறைமுக சர்வர் மூலமும் இனி விளையாட முடியாது - இந்தியாவில் இன்று முதல் முற்றிலுமாக தடை!
PC

மேலும் பப்ஜி விளையாடுவதால் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை வரைக்கும் செல்வதால் அந்த செயலியைத் தடை செய்ய தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது.

மேலும், பப்ஜி செயலி நீக்கப்பட்ட நிலையிலும் வலைத்தளங்கள் மூலமாகவும், வேறு சில வகையிலும் சிலர் பப்ஜி விளையாட்டை பதிவிறக்கம் செய்து விளையாடி வந்தனர்.

இந்நிலையில் தற்போது மத்திய அரசு பப்ஜி விளையாட்டு செயலி கிடைக்கும் மறைமுக சர்வர்களையும் முடக்கியுள்ளது. இதனால் தற்போது இந்தியாவில் பப்ஜி முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories