இந்தியா

வேளாண் சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நவ.,5ல் நாடுதழுவிய போராட்டம் -விவசாய சங்கங்கள் அதிரடி அறிவிப்பு

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நவம்பர் 5ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நவ.,5ல் நாடுதழுவிய போராட்டம் -விவசாய சங்கங்கள் அதிரடி அறிவிப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விவசாயத்தை கார்ப்பரேட் வசமாக்கும் வகையில் புதிய சட்டங்களை மேற்கொண்டுள்ளது மத்திய பாஜக அரசு. இதற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்கே களத்தில் இறங்கி போராடி வருகிறார்.

அங்கு விவசாயிகள் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட இருக்கிறது.

இது தொடர்பாக, சண்டிகரில் நடைபெற்ற விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 55 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வேளாண் சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நவ.,5ல் நாடுதழுவிய போராட்டம் -விவசாய சங்கங்கள் அதிரடி அறிவிப்பு

இந்தக் கூட்டத்தில், மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடிய புதிய மின்சார மசோதாவை கொண்டு வர கூடாது என்று வலியுறுத்தி நவம்பர் 5ம் தேதி நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்தில் லட்சக்கணக்கில் விவசாயிகள் பங்கேற்பார்கள் என்று அகில இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வி.எம். சிங் கூறியுள்ளார். மேலும், இதேக் கோரிக்கைகளை முன்னிறுத்தி டெல்லியை நோக்கி நவம்பர் 26 மற்றும் 27ம் தேதிகளில் பிரமாண்ட பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories