இந்தியா

பீகார் தேர்தல்: “இலவச தடுப்பூசியை வைத்து ஆதாயம் தேடும் பா.ஜ.க” - பா.ஜ.க மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்!

பீகார் சட்டமன்ற தேர்தல் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படும் என வாக்குறுதியை அளித்தற்கு எதிராக பா.ஜ.க மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

பீகார் சட்டபேரவை தேர்தல் வருகிற 28ம் தேதி முதல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டபேரவை தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க கூட்டணி அமைந்துள்ளது.

தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி நேற்றைய தினம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில், பீகார் மக்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்று வாக்குறுதியை நிதி அமைச்சர் வெளியிட்டது தவறு என்று கூறி, பா.ஜ.க மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன் தினம் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பீகார் தேர்தலுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், “சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். ஐ.சி.எம்.ஆர் இடமிருந்து ஒப்புதல் பெற்ற உடனேயே நடைமுறைப்படுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் தேர்தல்: “இலவச தடுப்பூசியை வைத்து ஆதாயம் தேடும் பா.ஜ.க” - பா.ஜ.க மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்!

பா.ஜ.கவின் இந்த தேர்தல் அறிக்கைக்கு பீகார் தேர்தலில் போட்டியிடம் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பித் தெரிவித்தனர். மேலும், கொரோனா தடுப்பூசியை வைத்து வாக்க சேகரிக்க பா.ஜ.க திட்டமிடுவதாகவும், மக்களுக்கு இலவசமாக கிடைக்கவேண்டிய தடுப்பூசியை தேர்தல் ஆதயத்திற்காக பயன்படுத்துவதாகவும் அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

இந்நிலையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சாகேத் கோகலே என்ற சமூக ஆர்வலர், பா.ஜ.க மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புகார் கடித்ததில், “மத்திய பா.ஜ.க அரசு பீகார் சட்ட மன்றத் தேர்தலில், தனக்கிருக்கும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது.

குறிப்பாக, பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில், தடுப்பூசி இலவசம் என அறிவித்திருப்பது பாரபட்சமானது. இந்த அறிவிப்பை பா.ஜ.க தலைவர்கள் வெளியிடாமல் மத்திய அமைச்சர் வெளிட்டுள்ளது சரியானது அல்ல. இதனை தேர்தல் ஆணையம் அறிய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories