இந்தியா

நீட் தேர்வு முடிவுகளில் தொடரும் குளறுபடி - ஆதாரத்துடன் சிக்கியதும் தேர்வு முடிவுகளை நீக்கிய மோடி அரசு!

நீட் தேர்வு முடிவுகள் குளறுபடி புகாரை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் குறித்த புள்ளி விபரங்கள் அடங்கிய அறிக்கையை இணையதளத்தில் இருந்து தேசிய தேர்வு முகமை நீக்கியுள்ளது.

நீட் தேர்வு முடிவுகளில் தொடரும் குளறுபடி - ஆதாரத்துடன் சிக்கியதும் தேர்வு முடிவுகளை நீக்கிய மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்றது.

ஏழைகளுக்கு மருத்துவப் படிப்பை எட்டாக்கனியாக்கும் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். உயிர் குடிக்கும் நீட் தேர்வுக்கு எதிராக நாடே கொந்தளித்த போது, பா.ஜ.க அரசு பிடிவாதமாக தேர்வை நடத்தியது.

நீட் தேர்வு முடிவுகளில் தொடரும் குளறுபடி - ஆதாரத்துடன் சிக்கியதும் தேர்வு முடிவுகளை நீக்கிய மோடி அரசு!

தமிழகத்தில் மட்டும் இந்தத் தேர்வை சுமார் ஒரு லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் எழுதினர். சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 14 நகரங்களில் 238 மையங்களில் நீட் தேர்வு நடைபெறது. இந்த நீட் தேர்வு நடைபெறும்போதே பல்வேறு குளறுபடிகள் அரங்கேறினர்.

குறிப்பாக, பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் தேர்வுக்கு மாணவர்கள் காலை 11 மணிக்கே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால், தேர்வு மையங்களில் உணவு வசதி ஏற்படுத்தப்படாததால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு மத்தியில் பசியால் வாடும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் வெளியான நீட் தேர்வு முடிவுகளில், பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பது ஆதாரத்துடன் தற்போது வெளியாகியுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் www.ntaneet.ac.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டது.

நீட் தேர்வு முடிவுகளில் தொடரும் குளறுபடி - ஆதாரத்துடன் சிக்கியதும் தேர்வு முடிவுகளை நீக்கிய மோடி அரசு!

இந்த தேர்வு முடிவுகள் வெளியாகிய இணையத்தில் பல குளறுபடிகள் ஏற்பட்டது. இந்நிலையில், தேர்வு முடிவுகளை பார்க்கும் போது மொத்த தேர்வு எழுதியவர்களுக்கும், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம் மற்றும் எண்ணிக்கையில் மிகப் பெரிய குளறுபடி உள்ளது அம்பலமானது.

குறிப்பாக, திரிபுராவில் 3,536 பேர் தேர்வு எழுதிய நிலையில் 88,889 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தரகண்ட் மாநிலத்தில் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 12,047 ஆக இருக்கும் போது தேர்ச்சி பெற்றவர் 37,307 ஆறிவிக்கப்பட்டுள்ளது.

அதேப்போல், தெலுங்கானா மாநிலத்தில் 50,392பேர் தேர்வெழுதிய நிலையில், வெறும் 7,323 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக குறிப்பிட்டுவிட்டு, தேர்ச்சி விகிதம் 60.79 என அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகளில் தொடரும் குளறுபடி - ஆதாரத்துடன் சிக்கியதும் தேர்வு முடிவுகளை நீக்கிய மோடி அரசு!

தெலுங்கானாவை போலவே, உத்தர பிரதேச மாநிலத்தில் 1,56,992 பேர் எழுதி, 7,323 தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால், தேர்ச்சி விகதம் 60.79 என குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக மாநிலம் வாரியாக முறையாக கணக்கிட்டால் மேலும் குளறுபடிகள் தெரியவரும் என கல்வியாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் குளறுபடி புகாரை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் குறித்த புள்ளி விபரங்கள் அடங்கிய அறிக்கையை இணையதளத்தில் இருந்து தேசிய தேர்வு முகமை நீக்கியுள்ளது. அதே நேரத்தில், மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை தனித்தனியாக தெரிந்து கொள்ளும் வசதி மட்டும் தற்போதும் உள்ளது.

இதனிடையே தேசிய தேர்வு முகமையின் செயல் கடுமையான விமசனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. மோடி அரசின் மோசடி அம்பலமானதாக மாணவர்கள், பெற்றோர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories