இந்தியா

தெலங்கானா, ஆந்திராவை புரட்டிப்போட்ட வெள்ளம்... வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்... 32 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் 32 பேர் கனமழையால் உயிரிழந்துள்ளனர்.

தெலங்கானா, ஆந்திராவை புரட்டிப்போட்ட வெள்ளம்... வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்... 32 பேர் உயிரிழப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் 117 ஆண்டுகளுக்கு பிறகு கடும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் நகரம் முழுவதும் இடைவிடாது அதிகனமழை பெய்ததன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஹைதராபாத் நகரில் சுமார் 1,500 குடியிருப்புகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு தீவுகளாக காட்சி அளிக்கின்றன. ஏராளமானோர் வீடு, உடமைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர்.

தெலங்கானா, ஆந்திராவை புரட்டிப்போட்ட வெள்ளம்... வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்... 32 பேர் உயிரிழப்பு!

மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால் நகரின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் 32 பேர் கனமழையால் உயிரிழந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories