இந்தியா

மூத்த அரசியல் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்!

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

மூத்த அரசியல் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பீகாரின் முக்கிய அரசியல் கட்சியான லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் காலமானார். அவருக்கு வயது 74.

ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ராம்விலாஸ் பஸ்வான் குணமடைந்து வருவதாக தகவல் வெளியான நிலையில், மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் காலமானார்.

அவரது மறைவை அவரது மகன் சிராக் பஸ்வான் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில், “அப்பா நீங்கள் தற்போது இந்த உலகத்தில் இல்லை. எப்போது எல்லாம் எனக்கு தேவையோ அப்போது எல்லாம் நீங்கள் என்னுடன் இருந்திருக்கிறீர்கள். உங்களை பிரிந்து வாடுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மூத்த அரசியல் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்!

1946-ம் ஆண்டு பீகாரின் ககாரியா மாவட்டத்தில் பிறந்த ராம்விலாஸ் பஸ்வான், 8 முறை எம்.பி.யாக பொறுப்பு வகித்தார். 2000-ம் ஆண்டு லோக் ஜனசக்தி கட்சியை துவக்கி தற்போது வரை அதன் தலைவராக இருந்து வருகிறார்.

1977, 1989 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பீகாரின் ஹாஜிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தவர் ராம் விலாஸ் பஸ்வான்.

மூத்த அரசியல் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories