இந்தியா

ராகுலைத் தொடர்ந்து டெரிக் ஓ பிரையனை தள்ளிவிட்டு தாக்குதல் : எதிர்க்கட்சியினரிடம் அத்துமீறும் உ.பி போலிஸ்!

உ.பி.யில் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட பெண்ணின் ஊருக்குச் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையனை போலிஸார் தள்ளியதில் தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராகுலைத் தொடர்ந்து டெரிக் ஓ பிரையனை தள்ளிவிட்டு தாக்குதல் : எதிர்க்கட்சியினரிடம் அத்துமீறும் உ.பி போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் சிறுமிகள், இளம்பெண்கள் குண்டர்கள் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. இச்சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மற்றும் பல்ராம்பூரில் கும்பல் பாலியல் பலாத்காரத்தால் 2 பெண்கள் கொல்லப்பட்டனர். உத்தர பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆகியோர் வியாழனன்று ஹத்ராஸுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்க சென்றனர்.

அப்போது அவர்களது வாகனத்தை போலிஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் யமுனா விரைவு நெடுஞ்சாலையில் தொண்டர்களுடன் பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் நடந்துசென்றனர். அப்போது நடந்து சென்ற ராகுல் காந்தியை போலிஸார் தள்ளியதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராகுலைத் தொடர்ந்து டெரிக் ஓ பிரையனை தள்ளிவிட்டு தாக்குதல் : எதிர்க்கட்சியினரிடம் அத்துமீறும் உ.பி போலிஸ்!

இதனைத் தொடர்ந்து தடையை மீறிச் சென்றதாக பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை உ.பி போலிஸார் கைது செய்தனர். இதனையடுத்து ஹத்ராஸ் கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இரண்டாவது நாளாக அரசியல் கட்சியினர், பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு கிராமத்திற்குள் யாரும் நுழைய முடியாதபடி போலிஸார் தடுப்புகள் அமைத்து வருகின்றனர்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் மற்றும் மேலும் இரண்டு பெண் எம்.பிக்கள் என உ.பி.யில் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட பெண்ணின் ஊருக்குச் செல்ல முயன்றனர். ஊரின் எல்லையிலேயே போலிஸார் டெரிக் ஓ பிரையன் மற்றும் பெண்களை தடுத்தனர்.

அப்போது தடையை மீறிச் சென்ற டெரிக் ஓ பிரையனை போலிஸார் வலுக்கட்டாயமாக இழுத்து கீழே தள்ளிவிட்டனர். போலிஸார் தள்ளியதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். நேற்றைய தினம் ராகுல் காந்தி மீது இதேபோன்ற தாக்குதல் நடந்த நிலையில், எதிர்க்கட்சி எம்.பிக்கள் மற்றும் டெரிக் ஓ பிரையன் தாக்குதலுக்கு உள்ளானது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை நேர்மையாக நடக்க வேண்டுமானால் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories