இந்தியா

போக்குவரத்து வசதி, மதிய உணவுடன் பள்ளிகள் திறக்கப்படும் - புதுச்சேரி அரசு முடிவு

அக்டோபர் 5ம்தேதி முதல் புதுச்சேரியில் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

போக்குவரத்து வசதி, மதிய உணவுடன் பள்ளிகள் திறக்கப்படும் - புதுச்சேரி அரசு முடிவு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த காணொளி வாயிலான கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. இதில் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், தலைமை செயலர் அசுவின் குமார், புதுவை மாவட்ட ஆட்சியர் அருண், கல்வித்துறை செயலர் அன்பரசு, கல்வித்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

பின்னர் இந்த கூட்டத்தின் முடிவில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் முதற்கட்டமாக, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்கவும், அதேபோல் 9, 11ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் 12ந்தேதி பள்ளிகள் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.

போக்குவரத்து வசதி, மதிய உணவுடன் பள்ளிகள் திறக்கப்படும் - புதுச்சேரி அரசு முடிவு
PC

மேலும், மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி, மதிய உணவு உறுதி செய்யப்பட வேண்டும். மேலும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள பள்ளிகள் மட்டும் தற்போதைக்கு திறக்கப்படாது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சமுக இடைவெளி உறுதி செய்யப்பட வேண்டும்.. மேலும் பெற்றோர்களின் கையொப்ப உறுதி பெற்ற பிறகே மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்.

அவ்வாறு பள்ளி வரும் மானவ செல்வங்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை செய்யும்போது ஏதேனுக் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பிவைக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகள் அனைத்தும் சிறப்பு கண்காணிப்பாளர்கள் மூலம் கண்கானிக்கவும், இந்த கூட்டத்தின்போது உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories