இந்தியா

விவசாயத்தை கூறுபோட்டு விற்க முனையும் மோடி அரசு - மாநிலங்களவையிலும் தாக்கலானது வேளாண் மசோதா!

எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்கள் இன்று தாக்கலானது.

Modi
Modi
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விவசாய விளை பொருள் வர்த்தக மசோதா, விளை பொருட்களுக்கு உரிய விலை கொடுக்கும் உத்தரவாதம், அத்தியாவசிய பொருட்களுக்கான திருத்த சட்டமசோதா ஆகிய 3 மசோதாக்களை பெரும்பான்மையை பயன்படுத்தி நாடாளுமன்ற மக்களவையில் மத்திய மோடி அரசு நிறைவேற்றியது.

இதற்கு எதிர்க்கட்சிகளிடையே கடுமையான எதிர்ப்புகள் நிலவி வந்தன. மாநிலங்களவையில் உள்ள தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் இந்த மசோதாக்கள் மூலம் சந்தைக்குச் செல்லும் விவசாய விளை பொருள்களின் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் பெரு வணிகர்களிடமும், கார்பரேட் நிறுவனங்களிடமும் சென்றுவிடும் என குற்றஞ்சாட்டினர்.

விவசாயத்தை கூறுபோட்டு விற்க முனையும் மோடி அரசு - மாநிலங்களவையிலும் தாக்கலானது வேளாண் மசோதா!

விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களை தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு விட வேண்டும் என தி.மு.க. எம்.பி திருச்சி சிவா திருத்த தீர்மானத்தையும் தாக்கல் செய்திருந்தார். ஆயினும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகள், எதிர்ப்புகளை கருத்திலேயே கொள்ளாமல், மத்திய பாஜக அரசு மாநிலங்களவையிலும் சர்ச்சைக்குரிய வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இம்மசோதாக்கள் குறித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தற்போது பேசி வருகின்றனர். அதில், குறைந்தபட்ச விலை என்பதே இருக்காது என்றும், அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்பட்டு அதன் விலை அதிகளவில் உயரும் என்றும், விவசாயம் கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குச் சென்றுவிடும் என்றும் சுட்டிக்காட்டி, மசோதாவின் பாதகங்களை விவரித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories