இந்தியா

#NationalUnemploymentDay : இன்னும் எத்தனை நாட்களுக்கு மோடி அரசு மக்களை ஏமாற்றப்போகிறது? - ராகுல் காந்தி

1.77 லட்சம் அரசு வேலைக்காக 1 கோடி பேருக்கும் மேலானோர் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்ற விளக்கப்படத்தையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

#NationalUnemploymentDay : இன்னும் எத்தனை நாட்களுக்கு மோடி அரசு மக்களை ஏமாற்றப்போகிறது? - ராகுல் காந்தி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்த நாள் கொண்டாடப்படும் வேளையில், தேசிய வேலையின்மை நாள் என்ற ஹேஷ்டேக் ஒன்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. மத்தியில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து நாட்டில் இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக எழுந்து வருகிறது.

பொருளாதார நிலையில் கொரோனாவுக்கு பின், கொரோனாவுக்கு முன் என உலக நாடுகளில் பிரித்து பார்க்கப்பட்டாலும், இந்தியாவில் மட்டும் அது கொடூரமான பகுதியையே காண்பிக்கிறது. ஏனெனில், கொரோனாவுக்கு முன்பே இந்தியாவின் பொருளாதாரமும், வேலைவாய்ப்புகளும் படுகுழியில்தான் இருந்தது. தற்போது அவை அதலபாதாளத்திற்கு சென்றிக்கிறது என பொருளாதார நிபுணர்கள், அறிஞர்கள் என பல தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மிகப்பெரிய வேலையின்மையை சந்தித்து வரும் சூழலை இளைஞர்கள் இன்றைய நாளை தேசிய வேலையின்மை நாளாக அழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

வேலைவாய்ப்பு என்பது ஒரு கவுரவமானது. இன்னும் எத்தனை நாட்களுக்கு அதனை மக்களுக்கு வழங்காமல் அரசு மறுக்கப்போகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், 1.77 லட்சம் அரசு வேலை வாய்ப்புக்காக, ஒரு கோடிக்கும் மேலானோர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பதை விளக்கும் படத்தையும் ராகுல் காந்தி அந்த ட்விட்டர் பதிவில் இணைத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories