இந்தியா

இதுவரை 109 எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க தனியாருக்கு அனுமதி - நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் பதில்!

இதுவரை 109 எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதில்.

இதுவரை 109 எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க தனியாருக்கு அனுமதி - நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இதுவரை 109 எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எம்.பிக்களின் கேள்விகளுக்கு துறைவாரியான பதில்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. ரயில்வே துறை தனியார்மயம் செய்யப்படுவது குறித்த கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

அந்த பதிலில், 2030 ஆண்டுக்குள் ரயில்வே துறையை மேம்படுத்த ரூ.50 லட்சம் கோடி தேவைப்படுகிறது. பற்றாக்குறையை ஈடுகட்ட தனியாருடன் இணைந்து ரயில்களை இயக்கவும், திட்டங்களை செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 109 எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க தனியாருக்கு அனுமதி - நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் பதில்!

அதன் ஒரு பகுதியாக சென்னை உள்ளிட்ட 12 மண்டலங்களில் இருந்து ஜூலை 1 முதல் நாடு முழுவதும் 109 எக்ஸ்பிரஸ் ரயில்களை தனியார் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து டெல்லி, மும்பை, ஹவுரா, மதுரை, மங்களூர், மும்பை, கோவை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், பாசஞ்சர் ரயில்களை இயக்க தனியாருக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் பியூஷ் கோயல் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories