இந்தியா

‘பாலுக்கும் காவல் பூனைக்கும் நண்பன்?’ : நாடகமாகும் மோடி அரசு - சீனாவுக்கு 7.29 பில்லியன் டாலர் ஏற்றுமதி!

இந்தியாவில் இருந்து சீனாவுக்கு செய்யப்படும் ஏற்றுமதி 7.29 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘பாலுக்கும் காவல் பூனைக்கும் நண்பன்?’ : நாடகமாகும் மோடி அரசு - சீனாவுக்கு 7.29 பில்லியன் டாலர் ஏற்றுமதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்திய சீன எல்லையில் இருநாட்டு இராணுவ வீரர்களுக்கும் இடையேயான மோதலால் இந்திய வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உரசல் இருந்து வருகிறது. இதனையடுத்து மத்திய அரசு 59 சீன மொபைல் ஆப்களை தடை செய்து உத்தரவிட்டது.

மேலும் பா.ஜ.க ஆதரவாளர்களால் சீன பொருட்களை புறக்கணிப்போம் என்ற கோஷமும் முன்வைக்கப்பட்டது. அதேவேளையில், சீனாவும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை அதிகரித்தது.

குறிப்பாக, இந்தியாவில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆன்ட்டி டம்பிங் டியூட்டிக்கும் (Anti Dumping Duty) இந்திய கம்பெனிகளை பொறுத்து சுமார் 7.4 சதவீத்தில் இருந்து 30.6 சதவீதம் வரை வரி விதித்தது.

‘பாலுக்கும் காவல் பூனைக்கும் நண்பன்?’ : நாடகமாகும் மோடி அரசு - சீனாவுக்கு 7.29 பில்லியன் டாலர் ஏற்றுமதி!

இந்நிலையில் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு தடையில்லாததால், கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதத்தில் மட்டும் 7.29 பில்லியன் டாலருக்கு பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுவே கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் - ஜூலை காலக்கட்டத்தில் இந்தியா சீனாவிற்கு 5.57 பில்லியன் டாலருக்கு மட்டுமே பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. இதனால் கடந்தாண்டைவிட இந்தாண்டு சுமார் 30.8 சதவீதம் அதிகமாக இந்தியா ஏற்றுமதி செய்திருக்கிறது.

இதனிடையே சீனாவுடன் ஏற்றுமதியை அதிகரித்த இந்தியா மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது மிகவும் குறைவாகும். அதாவது, இந்தியா கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் - ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் சேர்ந்து சுமார் 104.14 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

‘பாலுக்கும் காவல் பூனைக்கும் நண்பன்?’ : நாடகமாகும் மோடி அரசு - சீனாவுக்கு 7.29 பில்லியன் டாலர் ஏற்றுமதி!

ஆனால் 2020ம் ஆண்டு ஏப்ரல் - ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கு வெறும் 75.01 பில்லியல் டாலருக்கு மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. இது ஏற்றுமதி அளவில் இருந்து சுமார் 29 சதவீதம் சரிந்துள்ளதையே காட்டுகிறது.

வெளியில், வர்த்தத்தில் சீனாவை புறக்கப்பணிப்பதாக சொல்லும் மோடி அரசு, அதிக வரி விதிப்பு என்றாலும் இந்திய பொருட்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வது ஏன்? இதனால் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் லாபம் அடையுமா? என பொருளாதார வல்லுநர்கள் பலரும் கேள்வி எழுப்புயுள்ளனர்.

banner

Related Stories

Related Stories