இந்தியா

'அசுத்தமான' மாநகர்- 312வது இடத்துக்கு சரிந்தது சென்னை

தூய்மை நகரங்கள் பட்டியலில் 69-ம் இடத்தில் இருந்த சென்னை 312-வது இடத்துக்கு சரிந்துள்ளது.

'அசுத்தமான' மாநகர்- 312வது இடத்துக்கு சரிந்தது சென்னை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒவ்வொரு ஆண்டும் தூய்மையான நகரங்களின் தர வரிசை பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு 4,242 நகரங்களுக்கு வெளியிடப்பட்ட பட்டியலில் சென்னை பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

2019-ம் ஆண்டு வெளியான பட்டியலில் 69-ம் இடம் பிடித்த சென்னை மாநகரம், வேகமாக தூய்மையடைந்து வரும் மாநகர் என்ற விருதை பெற்றது. ஆனால் கடந்த ஓராண்டில் இந்நிலை தலை கீழாக மாறியுள்ளது. 69-ம் இடத்தில் இருந்த சென்னை 312-வது இடத்துக்கு சரிந்துள்ளது.

குப்பை மறுசுழற்சி, திடக்கழிவு மேலாண்மை, பொதுக் கழிப்பறை வசதிகள், திறந்த வெளியில் மலம் கழிப்பது, மக்களின் கருத்து போன்ற பல காரணிகளைக் கொண்டு மதிப்பீடு செய்யப்படுகிறது. அதில் சென்னை மாநகராட்சி நிறைவாக செயல்படவில்லை என்பதே இந்த சரிவுக்கு காரணமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு 45-வது இடமே கிடைத்துள்ளது. மொத்தம் உள்ள நகரங்கள் பட்டியல் 47 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் கோவை மாநகர் 40-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவிலேயே தூய்மையான நகரம் என்ற பட்டத்தை இந்தூர் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் சூரத் நகரும், மூன்றாம் இடத்தில் நவி மும்பை நகரும் இடம் பெற்றுள்ளன.

banner

Related Stories

Related Stories