இந்தியா

NEET, JEE தேர்வு எழுதும் மாணவர்கள் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் - தேர்வு முகமை உத்தரவு!

நீட், ஜெ.இ.இ தேர்வுகளை எழுதும் மாணவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்கிற சுய உறுதி படிவத்தை வழங்க வேண்டும் என தேசிய தேர்வு முகமை புதிய விதிமுறையை வெளியிட்டுள்ளது.

NEET, JEE தேர்வு எழுதும் மாணவர்கள் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் - தேர்வு முகமை உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இந்த சூழலில், நாட்டில் உள்ள கல்வி நிலையங்கள் மூடப்பட்டு மாணவர்கள் பல்வேறு நெருக்கடி மத்தியில் ஆன்லைன் வழியாக பாடம் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், வரும் கல்வியாண்டில் நடக்கவிருந்த தேர்வுகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்கள் நலன் பற்றி கவலைப்படாமல் மத்திய அரசு மட்டும், தனது அதிகாரத்திற்கு கீழ் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை கட்டாயம் நடத்தியே தீருவோம் என பிடிவாதமாக செயல்படுகிறது.

குறிப்பாக, உச்சநீதிமன்றம் நீட், ஜே.இ.இ தேர்வுகளை நடத்த தடைவிதிக்க மறுத்ததைத் தொடர்ந்து தேர்வுகளை நடத்த, மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை தயாராகி வருகிறது. இதன்படி, ஜே.இ.இ தேர்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளனர்.

NEET, JEE தேர்வு எழுதும் மாணவர்கள் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் - தேர்வு முகமை உத்தரவு!

அதன்படி தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள் தங்களுக்கு “கொரோனா பாதிப்பு இல்லை, அது தொடர்பான அறிகுறிகள் இல்லை” என்று எழுதிய நான்கு பக்க சுய உறுதி படிவத்தில் கையெழுத்திட்டு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் வெளிப்படையாக தெரியும் 50 மில்லி சானிடைசர் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதே விதிமுறைகள் நீட் மாணவர்களுக்கும் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய தேர்வு முகமையையின் இந்த அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்கிற பரிசோதனையை தங்கள் சொந்த செலவில் செய்யவேண்டுமா? என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

NEET, JEE தேர்வு எழுதும் மாணவர்கள் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் - தேர்வு முகமை உத்தரவு!

இதுகுறித்து கல்வியாளர் ஒருவர் கூறுகையில், “ இந்த பேரிடர் காலத்தில் மத்திய அரசு ஏன் பிடிவாதமாக தேர்வு நடத்த துடிக்கிறது என்ற கேள்வி எழுகிறது. அதுமட்டுமல்லாது, மாணவர்களுக்கு இந்த நேரத்தில் தேர்வு வைத்தால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும்.

மேலும், தேசிய தேர்வு முகமை தற்போது வெளியிட்டுள்ள உத்தரவு அநீதியானது. அனைத்து மாணவர்களாலும் எப்படி சொந்த செலவில் கொரோனா பரிசோதை செய்ய முடியும்? ஒருவேளை சோதனை முடிவில் அல்லது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அந்த மாணவர் எப்படி தேர்வு எழுதுவார்.

மாணவர்கள் 50 மில்லி சானிடைசர் எடுத்துச் செல்ல வேண்டும் என கூறுகிறார்கள் என்றால், சானிடைசர் கூட வழங்க முடியாத பொருளாதார நெருக்கடியில் மத்திய அரசு உள்ளதா? எனவே மோடி அரசு இத்தகைய அறிவிப்பை திருப்பிப் பெற்றுக்கொள்ள வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories