இந்தியா

“சீனாவின் பெயரை குறிப்பிடுவதற்கு அஞ்சுவது ஏன்?” - பிரதமரின் சுதந்திர தின உரை குறித்து காங்கிரஸ் கேள்வி!

சீனாவின் பெயரை குறிப்பிடுவதற்கு நமது ஆட்சியாளர்கள் ஏன் அஞ்சுகிறார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா.

“சீனாவின் பெயரை குறிப்பிடுவதற்கு அஞ்சுவது ஏன்?” - பிரதமரின் சுதந்திர தின உரை குறித்து காங்கிரஸ் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவின் 74வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ள ஆயுதப்படைகள் இந்திய இறையாண்மைக்கு சவால் செய்ய முயன்றவர்களுக்கு பொருத்தமான பதிலை அளித்துள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் இந்திய இறையான்மைக்கு சவால் விடும் நாடுகளின் பெயர்களை மோடி குறிப்பிடவில்லை.

இந்நிலையில், சீனாவின் பெயரை குறிப்பிடுவதற்கு நமது ஆட்சியாளர்கள் ஏன் அஞ்சுகிறார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா.

சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், அகமது படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

“சீனாவின் பெயரை குறிப்பிடுவதற்கு அஞ்சுவது ஏன்?” - பிரதமரின் சுதந்திர தின உரை குறித்து காங்கிரஸ் கேள்வி!

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, “நமது நாட்டின் ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறை குறித்து 130 கோடி இந்தியர்களும் பெருமைப்படுகிறோம். எதிரிகள் நம் மீது தாக்குதல் நடத்திய போதெல்லாம் நம் இராணுவத்தினர் அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

ஆனால், சீனாவின் பெயரை குறிப்பிடுவதற்கு நமது ஆட்சியாளர்கள் ஏன் அஞ்சுகிறார்கள். சீனா நமது பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ள நிலையில் நமது இறையாண்மையை பாதுகாக்க என்ன திட்டத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் முன்மொழிகிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.

banner

Related Stories

Related Stories