இந்தியா

“சேர்க்கை கட்டணத்தை 1 ரூபாயாக குறைத்த கல்லூரி நிர்வாகம்”: மே.வங்க ரிஷி பங்கிம் கல்லூரி அதிரடி முடிவு!

மேற்கு வங்கத்தில் உள்ள ரிஷி பங்கிம் சந்திர கல்லூரி இளங்கலை பிரிவுகளில் சேரும் மாணவர்களுக்குச் சேர்க்கை கட்டணமாக வெறும் 1 ரூபாயை மட்டும் வசூலிக்கப்போவதாக அக்கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

“சேர்க்கை கட்டணத்தை 1 ரூபாயாக குறைத்த கல்லூரி நிர்வாகம்”: மே.வங்க ரிஷி பங்கிம் கல்லூரி அதிரடி முடிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தியா முழுக்க கொரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை பல மாதங்கள் இயங்காமல் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறி வந்தாலும் முழு கட்டணத்தையும் பல நிர்வாகங்கள் வசூலித்து வருகின்றன.

ஆனால் தேசத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு மேற்கு வங்க கல்லூரி முன் மாதிரியான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் மிக இக்கட்டான ஒரு காலகட்டத்தில் உள்ளது. கொரோனா தாக்கம் அந்த மாநிலத்தை வதைக்கும் அதே நேரத்தில் அம்பன் புயலும் அம்மாநிலத்தையே புரட்டிப் போட்டது. இந்த இரண்டுமே மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது.

இது போன்ற பிரச்சனைகள் பொது மக்களுக்கு இருப்பைக் கணக்கில் கொண்டு, மேற்கு வங்கத்தில் உள்ள ரிஷி பங்கிம் சந்திர கல்லூரி ஒரு மிக முக்கியமான, இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் முன் மாதிரியான ஒரு முடிவை எடுத்துள்ளது.

“சேர்க்கை கட்டணத்தை 1 ரூபாயாக குறைத்த கல்லூரி நிர்வாகம்”: மே.வங்க ரிஷி பங்கிம் கல்லூரி அதிரடி முடிவு!

இனி அந்த கல்லூரியில் இளங்கலை பிரிவுகளில் சேரும் மாணவர்களுக்குச் சேர்க்கை கட்டணமாக வெறும் 1 ரூபாயை மட்டும் வசூலிக்கப்போவதாக அக்கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரிஷி பங்கிம் சந்திர கல்லூரியில் இதற்கு முன்பு கட்டணமாக 3,500 ரூபாயிலிருந்து 11,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இது குறித்து பேசியுள்ள அக்கல்லூரியின் முதல்வர் முனைவர் சஞ்சிப் குமார் சஹா, “நைஹாட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களும், கல்லூரியில் இணையும் மாணவர்களும் ஏழைக் குடும்பங்களிலிருந்து வருபவர்கள். இந்த கோவிட் 19 நோய் பலரின் வேலையை பறித்துள்ளது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.” எனத் தெரிவித்தார்.

மேலும் “கோவிட் 19 மட்டுமல்ல, அம்பன் புயலும் கிராம பொருளாதாரத்தை மிக மோசமாகத் தாக்கியுள்ளது. இதனால் மக்கள் திண்டாடுகிறார்கள். இதனால் சமீபத்தில் நடந்த எங்கள் கல்லூரியின் ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில் நாங்கள் மக்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் கல்லூரிக்கான சேர்க்கை கட்டணத்தை 1 ரூபாயாக குறைக்க முடிவெடுத்தோம்.” எனவும் அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories