இந்தியா

லஞ்சம் தர மறுத்ததால் ஆத்திரம்: சீக்கியரின் முடியை பிடித்து ரோட்டில் தர தரவென இழுத்துச் சென்ற ம.பி போலிஸ்!

லஞ்சம் கேட்டு கொடுக்காத காரணத்தால் வியாபாரி ஒருவரின் தலை முடியை பிடித்து போலிஸார் இழுத்துச் செல்லும் காட்சி பதபதைக்க வைத்துள்ளது.

லஞ்சம் தர மறுத்ததால் ஆத்திரம்: சீக்கியரின் முடியை பிடித்து ரோட்டில் தர தரவென இழுத்துச் சென்ற ம.பி போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டில் அதிகார வன்முறைகள் தினந்தோறும் தொடர்ந்து வருவது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் பொது மக்களின் நண்பன் என்றுக் கூறிக்கொண்டு அப்பாவிகள் மீது போலிஸார் பலர் அதிகார பசியை தீர்த்துக்கொள்ளும் நிகழ்வு பெரும் அச்சத்தையே உண்டாக்கியுள்ளது.

அவ்வகையில் மத்திய பிரதேச மாநிலத்தின் பார்வானி மாவட்டத்தில் உள்ள பூட்டுக்கடை நடத்தி வருபவர் பிரேம் சிங். இவரை காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் இருவர் பிரேம் சிங்கின் தலைமை முடியை பிடித்து சாலையில் இழுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

லஞ்சம் தர மறுத்ததால் ஆத்திரம்: சீக்கியரின் முடியை பிடித்து ரோட்டில் தர தரவென இழுத்துச் சென்ற ம.பி போலிஸ்!

இந்த வீடியோ காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. லஞ்சம் கொடுக்க மறுத்ததால் இவ்வாறான தாக்குதலுக்கு தான் உள்ளாக்கப்பட்டேன் என வியாபாரி பிரேம் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனையடுத்து உதவி காவல் ஆய்வாளர் சீதாராம் யாதவ் மற்றும் தலைமை காவலர் மோகன் ஜம்ரே ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்தூர் காவல்துறை தலைமை கூறியுள்ளது.

மேலும் இது தொடர்பாக உரியா விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பிரேம் சிங்கும் அவரது நண்பர்களும் போதையில் இருசக்கர வாகனத்தில் வந்ததை அடுத்து அவர்களை விசாரித்த போது ஏற்பட்ட வாக்குவாதமே தாக்குதலாக மாறியுள்ளது என போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories