இந்தியா

ஒரே நாளில் 61,537 பேருக்கு கொரோனா: 21 லட்சத்தை எட்டும் பாதிப்பு..சென்னை உட்பட 16 மாவட்டங்களில் எச்சரிக்கை

இந்தியாவில் 6 லட்சத்து 19 ஆயிரத்து 88 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரே நாளில் 61,537 பேருக்கு கொரோனா: 21 லட்சத்தை எட்டும் பாதிப்பு..சென்னை உட்பட 16 மாவட்டங்களில் எச்சரிக்கை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே 61 ஆயிரத்து 537 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல, இதுவரையில் இல்லாத வகையில் ஒரே நாளில் 933 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள்

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நாடு முழுவதிலும் இருந்து 61,537 கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 61,537 பேருக்கு கொரோனா: 21 லட்சத்தை எட்டும் பாதிப்பு..சென்னை உட்பட 16 மாவட்டங்களில் எச்சரிக்கை

இதனையடுத்து ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்து 88 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கையும் 42 ஆயிரத்து 518 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 933 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள்.

அதேச்சமயத்தில் நாட்டில் 14 லட்சத்து 27 ஆயிரத்து 5 பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருப்பதாகவும், 6 லட்சத்து 19 ஆயிரத்து 88 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பால் குணமடைவோர் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருந்தாலும் தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் உச்சபட்ச அளவில் பதிவாகி வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் 61,537 பேருக்கு கொரோனா: 21 லட்சத்தை எட்டும் பாதிப்பு..சென்னை உட்பட 16 மாவட்டங்களில் எச்சரிக்கை

மேலும், தமிழ்நாடு, குஜராத், தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள 16 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தத்தம் மாநில தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, திருவள்ளூர், திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களிலும், குஜராத்தின் அகமதாபாத், சூரத் பெலகாவி, கர்நாடகாவின் பெங்களூரு, கல்புரகி, உடுப்பி, தெலங்கானாவின் ஹைதராபாத் மற்றும் மல்கஜ்கிரி ஆகிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories