இந்தியா

“பொருளாதார சிக்கலை சரிசெய்யும் திறன் மோடி அரசுக்கு இல்லை” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

“இந்திய பொருளாதாரத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை காற்றில் கரைந்துவிட்டது” என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாடுமுழுவதும் ஊரடங்கால் இந்தியாவின் பொருளாதாரமும் படு மோசமான நிலையை எட்டியுள்ளது.

இந்த பொருளாதார பிரச்னைகளைத் தீர்க்க மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பொருளாதார நடவடிக்கை தொடர்பாக தொடர்ந்து கருத்துத் தெரிவித்துவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசின் மோசமான பொருளாதார மேலாண்மை, லட்சக்கணக்கான இந்திய குடும்பங்களில் பேரழிவை ஏற்படுத்தும் என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது, “இந்திய பொருளாதாரத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை காற்றில் கரைந்துவிட்டது” என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.

இந்த நிலைமையை நாட்டின் பிரதமரும் அவரது அமைச்சரவை குழுவினரும் புரிந்துகொள்ளவில்லை. மேலும் பொருளாதார சிக்கலை சரி செய்யும் திறன் அவர்களுக்கு இல்லை; இந்திய பொருளாதாரத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை காற்றில் கரைந்துவிட்டது. எனவே ஒவ்வொரு இந்தியரும் இதைப் புரிந்து கொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories