இந்தியா

கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’ மருந்தை மனிதர்கள் மீது சோதனை செய்ய அனுமதி!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது கொரோனா தடுப்பூசி மருந்தான கோவிஷீல்டை மனிதர்கள் மீது சோதனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’ மருந்தை மனிதர்கள் மீது சோதனை செய்ய அனுமதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான பரிசோதனை பல நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதுவரை உலகளவில் 120 தடுப்பு மருந்துகள் ஆய்வு கட்டத்தில் உள்ளன. இந்தியாவிலும் பல மருந்து நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா செனேகா என்ற இந்திய நிறுவனமும் இணைந்து கோவிசீல்டு என்ற தடுப்பூசியைக் கண்டுபிடித்திருக்கிறது. முதல் கட்ட ஆய்வுகள் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஆய்வுகளை மனிதர்களில் மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையர் அனுமதி அளித்துள்ளார்.

பூனாவிலுள்ள மத்திய அரசின் சிரம் தடுப்பூசி ஆய்வு நிறுவனத்துக்கு இந்த சோதனைகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளத்காக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், டெல்லி எய்ம்ஸ் உள்பட நாடு முழுதும் 17 மருத்துவக் கல்லூரிகளில் 1,600 நபர்களுக்கு இந்த தடுப்பூசியைச் செலுத்தி ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’ மருந்தை மனிதர்கள் மீது சோதனை செய்ய அனுமதி!

ஏற்கனவே பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவேக்சின் கடந்த சில வாரங்களாக மனிதர்களிடம் ஆய்வை நடத்திவரும் நிலையில், தற்போது இந்திய தயாரிப்பான இரண்டாவது தடுப்பூசியின் ஆய்வும் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories