இந்தியா

“இதுதான் நீங்கள் சொல்லும் சரியான முடிவா?” - மோடி அரசுக்கு ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பியுமான ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.

“இதுதான் நீங்கள் சொல்லும் சரியான முடிவா?” - மோடி அரசுக்கு ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் பா.ஜ.க அரசின் தவறான முடிவுகளாலும், நிர்வாகக் குளறுபடிகளாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்ததோடு, கோடிக்கணக்கான தொழிலாளர்கள், பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

கொரோனா பரவல் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையிலும், மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தவே முடியாமல் திணறி வரும் நிலையிலும், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்ததால் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளோம் என பிரதமர் மோடி பேசி வருகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பியுமான ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார் ப.சிதம்பரம்.

அவரது ட்விட்டர் பதிவுகளில், “கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் ‘சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தோம்’ என்று பிரதமர் பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

கீழ்க்கண்ட முடிவுகள் சரியான முடிவுகளா? அவற்றை யார் எடுத்தது?

நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு - சரியான முடிவா?

கோடிக்கணக்கான தினக்கூலி வேலை பார்ப்பவர்கள, சுய வேலை பார்ப்பவர்கள் திடீரென்று வேலை இழந்தார்களே - சரியான முடிவா?

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி, வீட்டை இழந்து பட்டினி கிடந்தார்களே - சரியான முடிவா?

ரயில்கள் இன்றி, பஸ் இன்றி பல லட்சம் மக்கள் பல நாறு கிலோமீட்டர்கள் நடந்தே சென்று தமது சொந்த ஊர்களை அடைந்தார்களே - சரியான முடிவின் விளைவா?

பல கோடி குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மூடப்பட்டு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கின்றனவே - இது சரியான முடிவுகளின் பயனா?

ஊரடங்கு விதிகளைத் தளர்த்திய பிறகும் வேலையிழந்த கோடிக்கணக்கானவர்கள் இன்னும் வேலையில்லாமல் இருக்கிறார்களே - சரியான முடிவுகளின் பயனா?” என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories