இந்தியா

“கொரோனா காலத்திலும் ஓட்டுப்பசி எடுத்து அலைகிறார் அமித்ஷா” - திரிணாமுல் காங். விளாசல்!

கொரோனா காலத்திலும் ஓட்டுப்பசி எடுத்து அலைகிறார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க-வினரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது.

“கொரோனா காலத்திலும் ஓட்டுப்பசி எடுத்து அலைகிறார் அமித்ஷா” - திரிணாமுல் காங். விளாசல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவில் கொரோனோ தொற்று, வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இறப்பு எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. மத்தியில் ஆளும்கட்சி என்ற வகையில், இப்பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டிய பா.ஜ.க தலைவர்கள் அக்கறையின்றிச் செயல்பட்டு வருகின்றனர்.

கொரோனா நாட்டையே துவம்சம் செய்து வரும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பீகாரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பியது விமர்சனத்திற்கு உள்ளானது.

அமித்ஷாவின் பேச்சைக் கேட்டு ராஷ்ட்ரிய ஜனதாதளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்திருந்தார். பதவிக்காக எப்போதும் குறிவைக்கும் அரசியல் கழுகுகள் என்று பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், கொரோனா காலத்திலும் ஓட்டுப்பசி, அதிகாரப் பசி எடுத்து அலைகிறார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க-வினரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது.

“கொரோனா காலத்திலும் ஓட்டுப்பசி எடுத்து அலைகிறார் அமித்ஷா” - திரிணாமுல் காங். விளாசல்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பார்த்தா சாட்டர்ஜி, “அமித்ஷாவின் முன்னுரிமைகள் என்ன என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது. நாடே கொரோனா பெருந்தொற்றுடனும், இயற்கைப் பேரிடராலும் பெரிய அளவில் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது வெறும் ஓட்டுப்பசியுடன் இருப்பவர்களின் முகத்தை மக்கள் நினைவில் கொள்வார்கள்.” என்று விளாசியுள்ளார்.

மேலும் திரிணாமுல் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையை அபாயத்திற்குள்ளாக்கியவர்தான் இந்த அமித்ஷா, இப்போது வங்காளத்தின் பண்பாட்டை மீட்கிறாராம். வித்யாசாகரின் சிலையை இவர்களது ஆட்கள் உடைத்தபோது மம்தா பானர்ஜிதான் அதை மீட்டெடுத்தார் என்பது நினைவில் இல்லையா?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories