இந்தியா

“இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வழக்கு” : மதச்சார்பற்ற இந்தியாவை சிறுமைப்படுத்த இந்துத்வா கும்பல் சதி!

இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றக்கோரி உச்சநிதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வழக்கு” : மதச்சார்பற்ற இந்தியாவை சிறுமைப்படுத்த இந்துத்வா கும்பல் சதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக இந்தியாவின் பெயரையே மாற்றக்கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2014 தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததில் இருந்து பா.ஜ.க தனது இத்துத்வா மற்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை இந்தியாவில் நிறுவ வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக கல்வியில் தொடங்கி உணவு விநோகிப்பதில் வரை இந்திய மக்கள் என்ன படிக்கவேண்டும், எதை சாப்பிட்ட வேண்டும் என்று முடிவு செய்கிறது.

மோடி அரசின் இத்தகைய முயற்சிகளை ஜனநாயக அமைப்புகள் கடுமையாக எதிர்த்து போராடியும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தும் வருகிறார்கள். ஆனால் தனக்கிருக்கும் பெரும்பான்மைப் பலத்தால் தனது நோக்கங்களை படிப்படியாக பா.ஜ.க அரசு நிறைவேற்றி வருகிறது.

“இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வழக்கு” : மதச்சார்பற்ற இந்தியாவை சிறுமைப்படுத்த இந்துத்வா கும்பல் சதி!

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க மற்றும் இந்துத்வா அமைப்புகள் முன்வைக்கும் கோரிக்கைகளின் ஒன்றான இந்தியாவின் பெயரை பாரதம் மற்றும் இந்துஸ்தான் என மாற்றவேண்டும் என்பதுதான். அதன்மூலம் இந்தியாவை இந்துக்களுக்கு உரிய நாடு என்று கூறும்படியாக இருக்கும் என இந்த கோரிக்கையை தொடர்ந்து முன்வைகிறார்கள்.

தற்போது அதேக் கோரிக்கையை வலியுறுத்தி இந்தியாவின் பெயரை மாற்ற கோரி உச்ச நீதிமன்றத்தில் நமா என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “இந்தியா" என்ற ஆங்கில பெயர் காலனி ஆதிக்கத்தை நினைவுபடுத்துவதாக உள்ளதாகவும், நாட்டு மக்கள் காலனி ஆதிக்க சிந்தனையில் இருந்து வெளிவர நாட்டின் பெயரை "பாரத்" என மாற்ற வேண்டும்.

நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களின் கடுமையான போராட்டத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் நமது தேசத்தின் பெயரை மாற்ற வேண்டும் என கோரியுள்ள அவர், "இந்தியா" என்ற நமது நாட்டின் ஆங்கில பெயரை "பாரத்" என மாற்றும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

“இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வழக்கு” : மதச்சார்பற்ற இந்தியாவை சிறுமைப்படுத்த இந்துத்வா கும்பல் சதி!

இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று இல்லாத காரணத்தினால் இந்த வழக்கு ஜூன் மாதம் 2 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் பெயரை மாற்றக்கோரிய வழக்கில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஒரு சமூக தரப்பினர் ஏற்றவகையில் இருப்பதால் மதச்சார்பற்ற நாட்டிற்கு அடையாளமாக உள்ள இந்தியா என்ற பெயரை மாற்றக்கூடாது, இந்த வழக்கைத் தள்ளுப்படி செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories