இந்தியா

தொழிலாளர்களுக்கு தலா ரூ.3,000 கொடுத்து விமானத்திலும் அனுப்பி வைத்த காளான் விவசாயி... டெல்லியில் ருசிகரம்!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எவ்வித வசதியும் ஏற்படுத்தாமல் கையைவிரிக்கும் முதலாளிகளுக்கு இடையே தன்னிடம் பணிபுரிந்தவர்களை சொந்த ஊருக்கு விமானத்தில் அனுப்பியுள்ளார் ஒரு காளான் விவசாயி.

தொழிலாளர்களுக்கு தலா ரூ.3,000 கொடுத்து விமானத்திலும் அனுப்பி வைத்த காளான் விவசாயி... டெல்லியில் ருசிகரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 60 நாட்களுக்கும் மேலான நிலையில், இதுகாறும் சாலை மார்க்கமாக நடந்தே சொந்த ஊர்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் படையெடுக்கும் நிலை நின்றபாடில்லை.

அவ்வாறு செல்லும் வழியில் சோர்வு, விபத்து, பசிக் கொடுமை என பல்வேறு இன்னல்களையும் உயிரிழப்புகளையும் சந்திக்கின்றனர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.

இப்படி இருக்கையில் டெல்லியில் இருந்து பீகாருக்கு செல்ல தன்னுடைய 10 தொழிலாளர்களுக்கு விவசாயி ஒருவர் ரூ.68 ஆயிரம் மதிப்பில் விமான டிக்கெட் எடுத்து கொடுத்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், 10 பேருக்கும் தலா 3 ஆயிரம் ரூபாயும் கொடுத்து அனுப்பியுள்ளார்.

தொழிலாளர்களுக்கு தலா ரூ.3,000 கொடுத்து விமானத்திலும் அனுப்பி வைத்த காளான் விவசாயி... டெல்லியில் ருசிகரம்!

டெல்லியில் உள்ள திகிபூர் என்ற கிராமத்தில் காளான் விவசாயியான பப்பன் சிங் என்பவர் இதுதொடர்பாக பேசியபோது, முதற்கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சமயத்தில், ஏப்ரல் முதல் வாரத்தில் சொந்த ஊர்களுக்கு திரும்ப தொழிலாளர்கள் எத்தனித்த போது, ரயில்கள் ஏதும் இயக்கப்படாத காரணத்தால் அவர்களால் ஊருக்குச் செல்ல முடியாமல் போயுள்ளது.

அதனையடுத்து, அறிவிக்கப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலம் அவர்கள் அனைவரையும் பாட்னாவில் உள்ள சமஸ்திபூருக்கு அனுப்பிவைக்க முயற்சித்தேன். ஆனால் அது கைகூடவில்லை. அதேசமயம், மற்ற தொழிலாளர்களை போன்று அவர்களை ஆயிரக்கணக்கான மைல்களுக்கு நடந்தே செல்லவைக்க எனக்கு மனம் வரவில்லை. ஆகவே, விமான போக்குவரத்து தொடங்கியதும் விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்தேன்” எனக் கூறியுள்ளார்.

இதேபோல, பாப்பன் சிங்கிடம் 27 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் லக்கிந்த என்ற தொழிலாளி பேசியபோது, “ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் எங்களுக்கான அனைத்து தங்கும் மற்றும் உணவு வசதிகளை பாப்பன் சிங் ஏற்படுத்திக் கொடுத்தார். என் வாழ்நாளில் விமானத்தில் பயணிப்பேன் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. விமான நிலையத்தில் என்ன செய்ய வேண்டும் என்றுக் கூட தெரியவில்லை. மிகவும் பதட்டமாகவே இருந்தேன். எங்கள் அனைவரையும் பாப்பன் சிங்கே விமான நிலையத்தில் வந்து இறக்கிவிட்டார்.” என மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories