இந்தியா

“விபத்து, உடல் சோர்வு; ஒரு நாளில் சராசரியாக 4 புலம் பெயர் தொழிலாளர்கள் மரணம்”: மோடி அரசால் நடந்த கொடூரம்!

ஊரடங்கு துவங்கியதிலிருந்து சராசரியாக நாள் ஒன்றுக்கு நான்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

உலக நாடுகளில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் தனது விஸ்வரூபத்தைக் காட்டி வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி நாடுமுழுவதும் முழு ஊரடங்கை அறிவித்துள்ளார்.

50 நாட்களுக்கு மேல் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் இன்னும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி நடைபயணம் நடந்துச் சென்றுக்கொண்டே இருக்கின்றனர். எந்தவித முன்அறிவிப்பும் இல்லாமல் திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை படுமோசமான நிலைக்குச் சென்றுள்ளது.

நாடுமுழுவதும் பெருளாதாரத் தேவைக்காக புலம் பெயர்ந்துச் சென்ற தொழிலாளர்கள் இந்த ஊரடங்கால் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடந்து மீண்டும் தங்கள் சொந்த கிராமங்களுக்கு நடந்த செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

“விபத்து, உடல் சோர்வு; ஒரு நாளில் சராசரியாக 4 புலம் பெயர் தொழிலாளர்கள் மரணம்”: மோடி அரசால் நடந்த கொடூரம்!

கடந்த மார்ச் 24ம் தேதியில் நடந்து சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதுவரை அதாவது ஊரடங்கு அறிவிக்கப்பட்டத்திலிருந்து நேற்று வரை மொத்தம் 208 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து செல்லும்போது ஏற்பட்ட விபத்துகள் மற்றும் மருத்துவ அவசர நிலைகளின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக, மார்ச் 29ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக இருந்தது. அப்போது, சாலை விபத்து மற்றும் மருத்துவ அவசர நிலையில் 20 பேர் உயிரிழந்தனர். அதனையடுத்து தொடர்ந்து நடந்த விபத்தால் மே 20ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 200க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஊடங்கள் மற்றும் அரசு குறிப்பின் படி பிரபல செய்தி நிறுவனம் மேற்கொண்ட பகுப்பாய்வு ஒன்றில், 138 பேர் சாலை விபத்துக்களிலும், 33 பேர் உடல் சோர்வு ஏற்பட்டும், 23 பேர் ரயில் விபத்துக்கள் மற்றும் 14 பிற காரணங்களால் உயிரிழந்துள்ளனர் என்று கூறிப்பிட்டுள்ளது.

“விபத்து, உடல் சோர்வு; ஒரு நாளில் சராசரியாக 4 புலம் பெயர் தொழிலாளர்கள் மரணம்”: மோடி அரசால் நடந்த கொடூரம்!

இதில் சாலை விபத்துகளே பெரும்பாலானோரின் இறப்பிற்கு காரணமாக உள்ளது எனவும் தெரிந்துள்ளது. மேலும் சராசரியாக நாள் ஒன்றுக்கு நான்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்து வருவது தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “வட மாநிலங்களில் பா.ஜ.க வை காலுன்ற வைத்த ஏழை தொழிலாளர்களை நிர்கதியாக விட்டுவிட்டது இந்த அரசு. தினசரி செய்தியாக வெளியாகும் செய்திகளில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் மரணமும் வந்துவிடுகிறது. நடந்துச் சென்றவர்களும், நடந்து செல்லும் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் நிச்சயம் இந்த அரசை மன்னிக்கமாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories