இந்தியா

‘தாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து அடித்தோம்’ : வழக்கறிஞரை தாக்கியதற்கு காரணம் சொன்ன போலிஸ் !

இஸ்லாமியர் என நினைத்து வழக்கறிஞரை மத்திய பிரதேச போலிஸார் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘தாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து அடித்தோம்’ : வழக்கறிஞரை தாக்கியதற்கு காரணம் சொன்ன போலிஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய பிரதேசத்தில் வழக்கறிஞராக பணியாற்றிவருபவர் தீபக் புந்துலே. இவர் கடந்த மாதம் 23ம் தேதி மருந்து வாங்குவதற்காக கடைக்குச் சென்றுள்ளார். தீபக்-கின் தோற்றமே முழு நீள தாடிதான்.

எப்போதும் தாடியுடன் இருக்கும் தீபக் கடைக்கு மாஸ் அணிந்துக்கொண்டு மருந்துவாங்க சென்றுள்ளார். அப்போது தீபக்கை அழைத்த போலிஸார் என்னவென்று கூட கேட்காமல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் உடனே விவரங்கள் தெரிந்த பின்னர் அடித்த போலிஸார் தீபக்கிடம் மன்னிப்புக் கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தீபக் கடும் மனவேதனை அடைந்துள்ளார்.

இதுதொடர்பாக தீபக் புந்துலே கூறுகையில், “கடந்த 5 ஆண்டுகளாக நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளது. அதற்காக மருத்து வாங்க சென்றேன். அப்போது தன்னை தடுத்த போலிஸார் எதுமே கேட்காமல் கண்மூடித்தனமாக தாக்கினர்கள். ஒன்று கூடி என்னை மிருகத்தனமாக தாக்கினர்.

‘தாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து அடித்தோம்’ : வழக்கறிஞரை தாக்கியதற்கு காரணம் சொன்ன போலிஸ் !

ஒருகட்டத்தில் கடும் கோவத்திற்குச் சென்ற நான் தான் ஒரு வழக்கறிஞர் என்று சொன்ன பிறகு அடித்தை நிறுத்திவிடு அங்கிருந்துச் சென்றனர். பின்னர் நண்பர்களை வரவழைக்கப்பட்டப் பிறகு அவர்கள் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னர், மறுநாள் என்னை அடித்த போலிஸார் மீது வழக்கு தொடர்ந்தேன். பல்வேறு துறை அதிகாரிகளிடம், மனித உரிமை ஆனைத்திடமும் புகார் அளித்துள்ளேன். முதல்வருக்கும் இதுதொடர்பாக புகார் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளேன்.

இந்த சம்பவங்கள் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலர் என்னைத் தொடர்புக் கொண்டு புகாரை வாபஸ் பெற வலியுறுத்தினர்கள். பின்னர் ஒருகட்டத்தில் மே 1ம் தேதி சில காவல்துறை அதிகாரிகள், என்மீது தாக்குதல் நடத்தியவர்கள் என் வீட்டுக்கு வந்து தவறாக நடைபெற்றுவிட்டது.

உங்களை வேண்டுமென்று அடிக்கவில்லை; நீண்ட தாடி வைத்துக்கொண்டு பார்க்க முஸ்லீம் போல இருந்ததால் அடித்தோம். மன்னித்துக் கொள்ளுங்க என்று கூறி புகாரை திரும்ப பெற கோரினார்கள்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories