இந்தியா

“மூன்று வெவ்வேறு விபத்துகளில் 16 பேர் பலி”: புலம்பெயர் தொழிலாளர்களை ஒழித்துகட்ட நினைக்கிறதா பா.ஜ.க ?

மூன்று மாநிலங்களில் நடந்த விபத்துக்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 16 பேர் இன்று உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அன்றாடம் தொழில் செய்து பொருள் ஈட்டும் ஏழை எளிய மக்கள் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். எந்த வித ஏற்பாடுகளும் இன்றி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாகவே தங்கள் சொந்த கிராமத்திற்கு சென்றனர்.

இதில் 130க்கும் மேற்பட்டவர்கள் உணவின்றியும் சாலை விபத்திலும் உயிரிழந்தனர். குறிப்பாக, வேலையில்லாமல், உணவு உண்ணாமல் கடுமையான இன்னல்களை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல், சமூகநலக் கூடங்களிலும், பள்ளிகளிலும் பல்வேறு பகுதிகளில் அடைந்து கிடக்கிறார்கள். சுமார் 50 நாட்களுக்கு மேலாக பல்வேறு சிரமங்களை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர்.

“மூன்று வெவ்வேறு விபத்துகளில் 16 பேர் பலி”: புலம்பெயர் தொழிலாளர்களை ஒழித்துகட்ட நினைக்கிறதா பா.ஜ.க ?

இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பச் செல்ல சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஆனால் அதில் முறையான ஏற்பாடுகள் இல்லாததால் லாரிகள் , சரக்கு வாகனங்களில் செல்கின்றனர்.

அப்படி செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் போது அப்பாவி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் உயிரை பறிக்கொடுத்துள்ள சம்பவம் தினந்தோரும் நடந்து வருகிறது. அப்படி இன்று மட்டும் மூன்று மாநிலங்களில் நடந்த விபத்துக்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 16 பேர் இன்று உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இன்று காலை பீகார் மாநிலம் காரிக் பகுதியில் தொழிலாளர்கள் பயணித்த லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் லாரி கவிழ்ந்தது. இரும்பு குழாய்கள் கொண்டு சென்ற அந்த லாரியில் பயணித்த 9 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்துள்ளனர்.

“மூன்று வெவ்வேறு விபத்துகளில் 16 பேர் பலி”: புலம்பெயர் தொழிலாளர்களை ஒழித்துகட்ட நினைக்கிறதா பா.ஜ.க ?

இதனிடையே மகாராஷ்டிராவில் ஜார்கண்ட் மாநில தொழிலாளர்களுடன் கோல்வான் ரயில் நிலையம் சென்று கொண்டிருந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதியதில் 4 பேர் பலியானார்கள். இதில்15 பேர் காயமடந்துள்ளனர். இவர்கள் இன்று சிறப்பு ரயில் மூலம் சொந்த மாநிலத்துக்கு பயணிக்கவிருந்த நிலையில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் நடந்த மற்றொரு விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் பலியாகினர். டெல்லியிலிருந்து சென்ற தொழிலார்கள் பயணித்த லாரி மகோபா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகி உள்ளனர். 12 பேர் காயமடைந்தனர்.

“மூன்று வெவ்வேறு விபத்துகளில் 16 பேர் பலி”: புலம்பெயர் தொழிலாளர்களை ஒழித்துகட்ட நினைக்கிறதா பா.ஜ.க ?

உண்மை நிலைமைகள் இப்படி இருக்க செய்தியாளர் சந்திப்பு மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பா.ஜ.கவினர் புலம் பெயர்ந்த தொழிலாளார்களை பாதுகாப்பாக ஊருக்கு அனுப்ப ரயில் அனுப்புவதாகவும் அதற்காக 85 சதவீத கட்டணத்தை அரசே கட்டுவதாகவும் சொல்கிறார்கள்.

அவர்கள் சொன்னப்படி நடந்திருந்தால் பச்சிளம் குழந்தை, கர்ப்பினி பெண்கள், முதியவர்கள் என தொடங்கி இன்று உயிரிழந்த 16 பேர் உயிரோடு தங்கள் குடும்பத்தோடு இருந்திருப்பார்கள். அரசு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விசயத்தில் வாய்ச்சவிடால் மட்டுமே பேசுகிறது என்று தெரிகிறது. இதன் மூலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஒழித்துகட்ட பா.ஜ.க அரசு நினைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

banner

Related Stories

Related Stories