இந்தியா

“ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த நிர்பந்திப்பது சட்ட விரோதம்” : முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கருத்து!

ஆரோக்கிய சேது ஆப்பை கட்டாயப்படுத்துவது சட்ட விரோதம் என்றும் எந்த சட்டத்தின் படி இதனை கட்டாயப்படுத்த முடியும் என்றும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

கொரோனா அறிகுறி குறித்தும், அதன் பரவல் குறித்தும் அறிய ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நோய் தாக்குதலுக்கு ஆளான நபரின் அருகில் சென்றால் நம்மை எச்சரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி, 5 கோடிக்கும் அதிகமானோரால் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரயில், விமானப் பயணிகள் இதனை கட்டாயம் பதிவிரக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. உத்தர பிரதேசத்தில் இந்த ஆப் இல்லாதவர்களிடம் போலிஸார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஆரோக்கிய சேது செயலியில் தனிநபர் விவரங்கள் பாதுகாப்பாக இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். மேலும் இதனைப் பயன்படுத்தும் பொதுமக்களுடைய தகவல்களின் பாதுகாப்பு குறித்து நிபுணர்கள் பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

“ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த நிர்பந்திப்பது சட்ட விரோதம்” : முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கருத்து!

ஆனால், இது முற்றிலும் பாதுகாப்பானது என்று கூறியுள்ள மத்திய அரசு 180 நாட்களில் சர்வர்களிலில் இருந்து பொதுமக்களின் தகவல்கள் தானாக மறைந்துவிடும் என்று கூறியுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அமைத்துள்ள தகவல் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் குழுவின் தலைவரான நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, ஆரோக்கிய சேது ஆப்பை கட்டாயப்படுத்துவது சட்ட விரோதம் என்றும் எந்த சட்டத்தின் படி இதனை கட்டாயப்படுத்த முடியும். அதாவது, உரிய சட்டம் எதுவும் இல்லாத நிலையில் எப்படி அதனை கட்டாயமாக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories