இந்தியா

“கொரோனா பரவலின் வீரியம் மே மாதத்தில் பயங்கரமாகும் - பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தை கடக்கும்”: அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கொரோனா பரவலின் வீரியம் மே மாதத்தில் பயங்கரமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்று சமூக அளவில் பரவிவிட்டால் கடுமையான உயிரிழப்புகளைச் சந்திக்க வேண்டும் என்பதால், தேசிய ஊரடங்கு இரண்டாவது கட்டமாக அறிவிக்கப்பட்டு தற்போது மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது 23 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

இந்நிலையில், மே 22ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் கொரோனாவால் 75 ஆயிரம் பேர் பாதிக்கக்கூடும் என டைம்ஸ் நாளிதழ் சர்வதேச நிறுவனமான புரோடிவிட்டியுடன் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

“கொரோனா பரவலின் வீரியம் மே மாதத்தில் பயங்கரமாகும் - பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தை கடக்கும்”: அதிர்ச்சி தகவல்!

இதனையடுத்து தற்போது, இந்தியாவில் கொரோனா பரவலின் வீரியம் மே மாதத்தில் பயங்கரமாக இருக்கும் என்றும் 38,220 உயிரிழப்புகள் நிகழும். 5.35 லட்சம் பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவர் எனவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளனர்.

இதுதொடர்பான ஆய்வை ஜவஹர்லால் நேரு சென்டர் ஃபார் அட் வான்ஸ்ட் சயின்டிஃபிக் ரிசர்ச், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்- பெங்களூர், ஐ.ஐ.டி-பம்பாய் மற்றும் ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி-புனே ஆகியவை மேற்கொண்டுள்ளன. மேலும் இந்த ஆய்வை இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன் மேற்பார்வையிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஜே.என்.சி.ஏ.எஸ்.ஆர் இணை பேராசிரியர் சந்தோஷ் அன்சுமாலி செய்தியாளர்களிடம் கூறுகையில், மிக மோசமான சூழ்நிலையில் தற்போதைய இறப்பு எண்ணிக்கை 652 -இ லிருந்து 38,220 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“கொரோனா பரவலின் வீரியம் மே மாதத்தில் பயங்கரமாகும் - பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தை கடக்கும்”: அதிர்ச்சி தகவல்!

அதே நேரத்தில் கொரோனா தொற் றுள்ளவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30 லட்சத்தைத் தொடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் 76,000-க்கும் மேற்பட்ட ஐ.சி.யூ படுக்கைகள் தேவைப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரியை அடிப்படையாகக் கொண்டே இத்தாலி மற்றும் நியூயார்க் மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டதாகவும் நோய்த்தொற்றுகள், இறப்புகளின் கணிப்புகள் கணிக்கப்பட்ட அளவிற்கு நெருக்கமாக பொருந்தின என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய தரவுகளின் அடிப்படையில், மே 19-ஆம் தேதிக்குள் சுமார் 38,000 பேர் உயிரிழப்பர். உண்மையான தரவு வருவதால் இது மாறக்கூடும். சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டுமென்பதை எச்சரிக்கவே இந்த ஆய்வு எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories