இந்தியா

“கொரோனாவை கட்டுப்படுத்துவதை விடுத்து வெறுப்பு வைரஸை பரப்பி வருகிறது பா.ஜ.க” - சோனியா காந்தி விளாசல்!

“சமூகத்தில் வகுப்புவாத எண்ணங்களையும், வெறுப்பு வைரஸையும் பா.ஜ.க தொடர்ந்து பரப்பி வருகிறது. பா.ஜ.கவின் செயல்கள் சமூக ஒற்றுமையை சீர்குலைத்திருக்கின்றன" எனப் பேசியுள்ளார் சோனியா காந்தி.

“கொரோனாவை கட்டுப்படுத்துவதை விடுத்து வெறுப்பு வைரஸை பரப்பி வருகிறது பா.ஜ.க” - சோனியா காந்தி விளாசல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் பா.ஜ.க அரசு வைரஸை கட்டுப்படுத்தத் தவறி குறிப்பிட்ட மதத்தினரின் மீது வெறுப்பைப் பரப்பி வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் காணொளிக் காட்சி மூலம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங். தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகையில் தெரிவித்ததாவது :

“கொரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சரி செய்ய அனைவரும் போராடி வரும் நிலையில், சமூகத்தில் வகுப்புவாத எண்ணங்களையும், வெறுப்பு வைரஸையும் பா.ஜ.க தொடர்ந்து பரப்பி வருகிறது. பா.ஜ.கவின் செயல்கள் சமூக ஒற்றுமையை சீர்குலைத்திருக்கின்றன.

“கொரோனாவை கட்டுப்படுத்துவதை விடுத்து வெறுப்பு வைரஸை பரப்பி வருகிறது பா.ஜ.க” - சோனியா காந்தி விளாசல்!

கடந்த 3 வாரங்களாக கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க பரிசோதனையைத் தீவிரப்படுத்துங்கள் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இரக்கம், பெருந்தன்மை, போன்ற நல்ல குணங்கள் மத்திய அரசிடம் வெளிப்படவில்லை. மக்களுக்கு சுகதாரம், உணவுப்பாதுகாப்பு, வாழ்வாதாரத் தேவைகள் தடையின்றிக் கிடைக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி செயல்படும்.

முதல்கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோதே நாட்டில் 12 கோடிப் பேருக்கு வேலை பறிபோய்விட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் பல மாநில எல்லைகளில் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உணவு, நிதிப்பாதுகாப்பு, வேலை ஆகியவற்றை வழங்கி உதவிட வேண்டும்.

மே 3-ம் தேதிக்குப்பின் சூழலை எவ்வாறு கையாளப்போகிறது என்பதற்கு மத்திய அரசிடம் தெளிவான சிந்தனை இல்லை. குறைந்தபட்சம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7,500 வழங்கிட வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories