இந்தியா

‘ஜியோ’ பங்குகளை வாங்கிய ‘ஃபேஸ்புக்’ நிறுவனம்... அடுத்த திட்டம் இதுதானா?

ஜியோ ப்ளாட்ஃபார்மின் 9.99% பங்குகளை வாங்க 43,574 கோடி ரூபாயை முதலீடு செய்ய ஒதுக்கியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

‘ஜியோ’ பங்குகளை வாங்கிய ‘ஃபேஸ்புக்’ நிறுவனம்... அடுத்த திட்டம் இதுதானா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ப்ளாட்ஃபார்மின் 9.99% பங்குகளை வாங்க 43,574 கோடி ரூபாயை முதலீடு செய்ய ஒதுக்கியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கிட்டத்தட்ட 40 லட்சம் பேர் வாட்ஸ்-அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் தற்போது கட்டண சேவையில் ஈடுபட்டு வரும் கூகுள்பே மற்றும் பேடிஎம் நிறுவனங்களுக்குப் போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் தனது டிஜிட்டல் கட்டண சேவையை இந்தியாவில் தொடங்க முயற்சிக்கிறது.

இதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்தின் இ-காமர்ஸ் நிறுவனமான ஜியோ-மார்ட்டுடன் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்-அப்பை இணைப்பதில் கவனம் செலுத்திவருவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இதன் ஒருபகுதியாக ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸின் 9.99% பங்குகளை வாங்குவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‛‛ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதியான ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட்டில் நாங்கள் 5.7 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.43,574 கோடி) முதலீடு செய்வதாக அறிவித்துள்ளோம். இதன் மூலம் அந்நிறுவனத்தின் குறைந்த அளவு பங்குதாரராக ஃபேஸ்புக் மாறும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜியோ’ பங்குகளை வாங்கிய ‘ஃபேஸ்புக்’ நிறுவனம்... அடுத்த திட்டம் இதுதானா?

ஃபேஸ்புக் ஜியோவுடன் இணைந்துள்ளதன் மூலம் சில்லறை வணிகத்தில் புதிய திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது. ஜியோ மார்ட்டில் சில்லறை வியாபாரிகள் தங்களை பதிந்து கொள்வார்கள். பின்னர் வாட்ஸ்-அப் மூலமாக தங்கள் கடையில் விற்கும் பொருட்களுக்கு ஆர்டர்களைப் பெறுவார்கள்.

வாடிக்கையாளர்கள் வாட்ஸ்-அப்பில் ஆர்டர் செய்தால் ஜியோ மார்ட் நிறுவனம், கடைகளில் இருந்து பொருட்களை வாங்கி, டெலிவரி செய்துவிடும். இதன் மூலம் இந்திய சில்லறை விற்பனை சந்தையில் இவ்விரு நிறுவனங்களும் பெரும் லாபம் பார்க்கத் திட்டமிட்டுள்ளன.

banner

Related Stories

Related Stories