இந்தியா

“பட்டினி வாழ்க்கைக்கு தள்ளப்பட்டிருக்கும் கிராமபுற தொழிலாளர்களுக்கு நிவாரணம் எங்கே?” : முத்தரசன் ஆவேசம்!

பட்டினி வாழ்க்கைக்கு தள்ளப்பட்டிருக்கும் நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் நிவாரண நிதி வழங்கவேண்டும் என இரா.முத்தரசன் கோரிக்கைவைத்துள்ளார்.

“பட்டினி வாழ்க்கைக்கு தள்ளப்பட்டிருக்கும் கிராமபுற தொழிலாளர்களுக்கு நிவாரணம் எங்கே?” : முத்தரசன் ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் நிவாரண நிதி வழங்கவேண்டும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரானா வைரஸ் நோய் தொற்றுப் பரவலைத் தடுக்க, சமூக இடைவெளி கடைபித்தல் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு சட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. கடந்த 24.04.2020 ஆம் தேதி மாலை 6 மணி முதல் நாடு முழுவதும் முடக்கம் செய்யப்பட்டு 11 நாள் ஆகிறது. இன்னும் 10 நாட்களை கடந்து செல்ல வேண்டும்.

நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய கடுமையான நோய் தடுப்பு நடவடிக்கை பயனுள்ள முறையில் அமைந்திட மத்திய, மாநில அரசுகள் தக்க முன் ஏற்பாடுகள் செய்யாதது பெருங் குறையாகும். குறிப்பாக கிராமப்புறத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், அமைப்புசாரத் தொழிலாளர்களின் உணவு, மருந்து, தனித்து இருப்பதற்கான இருப்பிடம், தடுப்பு மருத்துவக் கருவிகள் போன்ற அத்தியாவசியத் தேவைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் சிந்திக்கவில்லை. இது தொடர்பாக குடி மக்கள் உச்ச நீதிமன்றம் சென்று நியாயம் கேட்க வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்டனர்.

“பட்டினி வாழ்க்கைக்கு தள்ளப்பட்டிருக்கும் கிராமபுற தொழிலாளர்களுக்கு நிவாரணம் எங்கே?” : முத்தரசன் ஆவேசம்!
EdupediaPublications

கொரானா வைரஸ் நோய் தொற்று பரவல் தடுப்புக் காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் மற்றும் திட்டப்பணிகள் மட்டுமே வாழ்வாதாரம் என்றிருக்கும் ஊரகப் பகுதி தொழிலாளர்கள் வாழ்க்கை மிக மிக மோசமாக பாதிக்கப் பட்டிருப்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும். கடந்த ஆண்டு வேலை செய்த வகையில் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியப் பாக்கி ரூபாய் 11 ஆயிரம் கோடிக்கு அதிகமாகும்.

தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. இந்த ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய ஊதியப் பாக்கித் தொகையை உடனடியாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை கேட்டு பதிவு செய்த குடும்பங்களுக்கு 90 லட்சம் வேலை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 1 கோடியே 23 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் ஆண்டுக்கு நூறு நாள் வேலை பெறும் உரிமை பெற்றுள்ளனர்.

“பட்டினி வாழ்க்கைக்கு தள்ளப்பட்டிருக்கும் கிராமபுற தொழிலாளர்களுக்கு நிவாரணம் எங்கே?” : முத்தரசன் ஆவேசம்!

வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் வேலை வழங்குவதில்லை; வேலை வழங்குவதில் சமூகப் பாகுபாடு காட்டப்படுகின்றன; அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஊதியத்தை விட மிகக் குறைவான ஊதியம் கொடுக்கிறார்கள் என பல புகார்கள் இருக்கின்றன. கடந்த ஆண்டுகளில் சராசரியாக 41 மற்றும் 43 நாட்கள் தான் வேலை வழங்கப்பட்டிருக்கின்றன.

வேலையும் கிடைக்காமல், செய்த வேலைக்கு கூலியும் பெற முடியாமல் விவசாயத் தொழிலாளர்கள் படும்பாடு துயரமானது. பட்டினி வாழ்க்கைக்கு தள்ளப்பட்டிருக்கும் கிராமப்புறத் தொழிலாளர்களின் வறுமை நிலையைக் கருத்தில் கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள தொழிலாளர் குடும்பங்கள் அனைத்துக்கும் தலா ரூபாய் 10 ஆயிரம் வீதம் கொரானா வைரஸ் தொற்று நோய் பேரிடர் கால நிவாரண நிதியாக மத்திய அரசு வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டின் கிராமப்புறத் தொழிலாளர்களின் வறுமை நிலையை மத்திய அரசிடம் எடுத்துக் கூறி பேரிடர் கால நிவாரண நிதி பெற்று வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories