இந்தியா

“ஊரடங்கால் காணாமல் போன காற்று மாசுபாடு” : மாடியில் இருந்தே இமயமலையை ரசிக்கும் மக்கள் - சுவாரஸ்ய தகவல்!

ஊரடங்கு காரணமாக காற்று மாசுபாடு குறைந்ததால் இமயமலையில் அழகை பஞ்சாப் மக்கள் தங்களின் வீட்டில் இருந்தே காண்கின்றனர்.

“ஊரடங்கால் காணாமல் போன காற்று மாசுபாடு” : மாடியில் இருந்தே இமயமலையை ரசிக்கும் மக்கள் - சுவாரஸ்ய தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா பாதிப்பு உலக அளவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்திவருகின்றன. இந்தியாவில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. மரணங்களின் எண்ணிக்கையும் பாதிப்புகளின் எண்ணிக்கையும் உயர்ந்துவருவதால் நாட்டு மக்களை ஊரடங்கைத் தீவிரமாக கடைபிடித்துவர மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள் தொழிற்சாலை மற்றும் வாகனப்போக்குவரத்து என அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் முழுவதும் இதேநிலைதான் நீடிக்கிறது ஊடரடங்கில் உள்ள மக்கள் வீட்டிற்குள் முடங்கிடக்கும் இந்த சூழலில் அவர்களை உற்சாகமூட்டும் பல நிகழ்வுகள் அங்கேங்கே அரங்கேறுகிறது.

சமீபத்தில் இத்தாலியில் வெனிஸ் நகரின் கால்வாய்ப் பகுதிகளில் நீர்வழிப் போக்குவரத்து குறைவாக இருப்பதால் நீர் தெளிவாக காட்சி அளிக்கிறது. இதனால் நீருக்குள் இருக்கும் வண்ணமயமான மீன்களும் நீரின் மேற்பகுதிக்கு வந்துள்ளன. அதேபோல், நீர்வாழ் உயிரினங்களும் சுதந்திரமாக உலவி வருகின்றன.

பல நாடுகளில் கட்டுப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் நகரங்களுக்கு படையெடுக்கத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் ஊரடங்கு காரணமாக வாகனம் தொழிற்சாலை இயக்காததால் காற்றுமாசுபாடு பெருமளவில் குறைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் நைட்ரஜன் டை ஆக்சைடு உமிழ்வு கணிசமாகக் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் எப்போதும் புகைமண்டலமாக காட்சியளிக்கும் டெல்லியில் தற்போது நிலைமைகள் வேறுமாதிரியாக இருப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் நமக்கு உணர்த்துக்கின்றது. அதுமட்டுமின்றி, டெல்லி அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் காற்றுமாசுபாடு குறைந்துள்ளதால் 25 ஆண்டுகள் கழித்து தற்போது இமயமலையின் அழகை காண்கின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தார் பகுதியில் காற்றுமாசுபாடு குறைந்துள்ளதால் இமயமலையின் எழில்மிகு தோற்றம் தோற்றத்தை தங்கள் வீட்டின் மாடிகளில் நின்றே அழகை ரசித்து வருகின்றனர்.

“ஊரடங்கால் காணாமல் போன காற்று மாசுபாடு” : மாடியில் இருந்தே இமயமலையை ரசிக்கும் மக்கள் - சுவாரஸ்ய தகவல்!

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தெரிந்துவந்த இமயமலையின் அழகு அதிகரித்த போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளால் காணாமல் போனது. இந்நிலையில் தற்போது மீண்டும் தெரிய துவங்கியுள்ளது.

அதன் அழகை அப்பகுதியைச் சேர்ந்த பலரும் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்து தங்களின் மகிழ்ச்சியை வெளிகாட்டியுள்ளனர். தற்போது அந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories