இந்தியா

“மக்கள் ஒத்துழைப்புடன் தொடங்கியது சுய ஊரடங்கு” : நடமாட்டம் இல்லாமல் நாடே முடக்கம்! #FightAgainstCorona

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நாடு முழுவதும் இன்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

“மக்கள் ஒத்துழைப்புடன் தொடங்கியது சுய ஊரடங்கு” :  நடமாட்டம் இல்லாமல் நாடே முடக்கம்! #FightAgainstCorona
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் பரவுவதை தடுக்கும் வகையில் பிரதமர் மோடியின் அறிவிப்பின் படி இன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பேருந்துகள், லாரிகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓடாது. ஓட்டல்கள், மார்க்கெட்டுகள் இயங்காது, பால் விநியோகம் பெரும்பாலும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஊரடங்கை முன்னிட்டு பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 21-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 22-ம் தேதி இரவு 10 மணி வரை அனைத்து பயணிகள் ரயில்களும் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேப்போல், 22-ம் தேதி காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பெரும்பாலான எக்ஸ்பிரஸ் மற்றும் இன்டர்சிட்டி ரயில்களும் இயக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. புறநகர் ரயில்கள் அத்தியாவசியத் தேவைகளை கருத்தில் கொண்டு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் ஊரடங்கை முன்னிட்டு ஞாயிறு மட்டும் குடிநீர் உற்பத்தி மற்றும் விநியோகத்தை நிறுத்துவதாக கிரேட்டர் தமிழ்நாடு குடிநீர் உற்பத்தியா ளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஞாயிறு காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை அரசு போக்குவரத்துக் கழ கங்களின் பேருந்துகள் அனைத்தும் இயங்காது என்று முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தனியார் பேருந்து மற்றும் சிற்றுந்துகளின் உரிமையாளர்கள் அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்கள் ஊரடங்கை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நாளை ஒரு நாள் நிறுத்தி வைக்கப்படுவதாக அதன் டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் இன்று 1,000 விமானங்கள் இயக்கப்பட வில்லை. மேலும் நாடு முழுவதும் 3,700 ரயில்கள் இன்று நிறுத்தப்பட உள்ளன.

இதனிடையே, நாட்டில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை மகாராஷ்டிராவிலும், கேரளாவிலும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் நேற்றைய நிலவரப்படி 64 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 60 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவில் 307 ஆக உயர்ந்துள்ளது.

banner

Related Stories

Related Stories