இந்தியா

“ஊரடங்கு மத்தியில் கூட்டம் கூட்டமாக ரயில் பயணித்த வட இந்தியர்கள்”: இந்தியாவில் தனிப்படுத்துதல் சாத்தியமா?

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் கூட்டம் கூட்டமாக ரயில் பயணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி, நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் நாடுமுழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி நாடுமுமுவதும் சுய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அனைத்துவகையான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் ஊரடங்கிற்கு பெரும் ஒத்துழைப்பு அளிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் மற்றொரு அதிர்ச்சிகர வீடியோ ஒன்றும் வெளியாகியுளது. நாடுமுழுவதும் மக்கள் தனிமைப்படுத்தல் அவசியம் என கூறிவரும் நிலையில் நேற்றைய தினம் வட மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் கூட்டம் கூட்டமாக ரயில் பயணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான வெளியான வீடியோவில், வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் புனே ரயில் நிலையத்தில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஏராளமானோர் காத்திருக்கின்றனர். ஆனால் ஊரடங்கால் ரயில் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் கடைசியாக வந்த ஒரே ரயிலில் அளவுக்கு மீறிய பயணிகள் சென்றுள்ளனர்.

இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பலரும் அச்சமடைந்துள்ளனர். மேலும் மக்களை தனிமைப்படுத்துதல் இந்தியாவில் வாய்ப்பே இல்லை என்றும், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்காததன் விளைவே இதற்கு காரணம் என குற்றச்சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories