இந்தியா

கொரோனா எதிரொலி: ‘மைக்’ மூலம் வைரஸ் பரவும் - பேட்டி எடுக்கக் கூடாது- நிருபர்களுக்கு கேரள அரசு கட்டுப்பாடு!

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் செய்தியாளர்களுக்கு புது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது கேரள அரசு.

கொரோனா எதிரொலி: ‘மைக்’ மூலம் வைரஸ் பரவும் - பேட்டி எடுக்கக் கூடாது- நிருபர்களுக்கு கேரள அரசு கட்டுப்பாடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை நிலைகுலையச் செய்துள்ளது. இந்த வைரஸ் கிருமி இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் தற்போது வரை 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கேரளாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால், அம்மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பல்வேறு கெடுபிடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் எவ்வித நோய் தாக்கத்துக்கும் ஆட்படாமல் இருக்க இந்த அதிரடி உத்தரவுகள் உதவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா எதிரொலி: ‘மைக்’ மூலம் வைரஸ் பரவும் - பேட்டி எடுக்கக் கூடாது- நிருபர்களுக்கு கேரள அரசு கட்டுப்பாடு!

இந்நிலையில், கொரோனா வைரஸ் எந்த வகையிலும் பரவலாம் என்ற நிலை உள்ளதால், கேரளாவில் கொரொனா வைரஸ் பாதித்தவர்களையோ, அதன் அறிகுறி உள்ளவர்களையோ அல்லது அவர்களது உறவினர்களையோ செய்தியாளர்கள் பேட்டி எடுக்கக் கூடாது என பினராயி விஜயன் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

ஏனெனில், அவ்வாறு பேட்டி எடுக்கும் போது மைக் மூலம் நோய் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்பதாலேயே இந்த எச்சரிக்கை விடப்படுள்ளது. முன்னதாக கர்நாடகாவில் இதேபோல பேட்டி எடுத்தவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories