இந்தியா

“கடைகளில் தட்டுப்பாடு; 10 நாளில் 1 லட்சம் Sanitizers தயாரிக்கும் கேரளா” : பினராயி அரசு அசத்தல் நடவடிக்கை!

கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ளப் பயன்படும் கை சுத்திகரிப்பு மருந்தை தயாரித்து விற்பனை செய்ய கேரள மருத்துவ சேவைகள் கழகம் முடிவெடுத்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை நிலைகுலையச் செய்துள்ளது. இந்த வைரஸ் கிருமி இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் தற்போது வரை 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதேசமயம் வைரஸ் வராமல் தடுக்க தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா பெரும் பிரச்னையாக மாறிய பின் மருந்து சந்தையில் இருந்து கை சுத்திகரிப்பு மருந்துகள், முகக் கவசம் போன்றவைகளின் புழக்கம் அடியோடு குறைந்துள்ளது. இருக்கின்ற இடத்திலும் மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் சூழல் உள்ளது.

“கடைகளில் தட்டுப்பாடு; 10 நாளில் 1 லட்சம் Sanitizers தயாரிக்கும் கேரளா” : பினராயி அரசு அசத்தல் நடவடிக்கை!

இதனால் நடுத்தர ஏழை மக்கள் வாங்க முடியாமல் போகும் நிலையும் உருவாகியுள்ளது. இந்தச் சூழலில் கை சுத்திகரிப்பு மருந்தை கேரள அரசு உற்பத்தி செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து கேரளா பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கேளிக்கை அரங்குகளை முடக்கியுள்ளது. சுகாதாரத்துறை இதற்கான பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக தற்போது, கேரள மாநில மக்களுக்கு கை சுத்திகரிப்பு மருந்துகள் தயாரிக்க அம்மாநில மருத்துவ சேவைகள் கழகம் முடிவெடுத்தது. அதுவும் 10 நாட்களில் ஒரு லட்சம் பாட்டில்களை உற்பத்தி செய்யும் நோக்கில், கேரள மாநில மருந்துகள் உற்பத்தி அமைப்பு கை சுத்திகரிப்பு மருந்துகளை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக தொழில்துறை அமைச்சர், இ.பி.ஜெயராஜன் கூறுகையில், “தனியார் நிறுவனங்களால் விற்பனை செய்யப்படும் கை சுத்திகரிப்பு பொருட்களின் விலையில் ஒரு பகுதியிலேயே இவை பொதுமக்களுக்கு கிடைக்கும்.

முதல் கையிருப்பாக சுத்திகரிப்பு மருந்துகளை தலா 500 மில்லி பாட்டில்களில் அடைத்து, திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டது. வரும் சனிக்கிழமை 2,000 இலக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) ஒப்புதல் அளித்த அறிவுறுத்தலின் அடிப்படையில் இது தயாரிக்கப்படுகிறது” என ஜெயராஜன் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories