இந்தியா

லாபத்தில் இயங்கும் BPCL-ஐ விற்க மோடி அரசு துடிப்பது ஏன்? - காங்கிரஸ் கேள்வி!

லாபத்தில் இயங்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வது ஏன் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

லாபத்தில் இயங்கும் BPCL-ஐ விற்க மோடி அரசு துடிப்பது ஏன்? - காங்கிரஸ் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29 சதவிகித பங்குகளை விற்க கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி அதன் முதலீட்டாளர்கள் குழு மூலம் ஒப்புதல் பெற்று, 2020 மார்ச் 31-ம் தேதிக்குள் பங்குகளை விற்று முடிக்க இலக்கும் என மத்திய மோடி அரசு நிர்ணயித்துள்ளது.

மோடி அரசின் இத்தகைய நடவடிக்கைகள் பொதுத்துறையை முழுமையாக தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கை என்றும், அடுத்த இலக்காக மோடி பாரத் பெட்ரோலியத்தை அழிக்க நினைக்கிறார் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தும், குற்றஞ்சாட்டியும் வருகின்றனர்.

லாபத்தில் இயங்கும் BPCL-ஐ விற்க மோடி அரசு துடிப்பது ஏன்? - காங்கிரஸ் கேள்வி!

இந்நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா ட்விட்டரில் மோடி அரசை சாடி பதிவிட்டுள்ளார். அதில், கடந்த டிசம்பர் மாதம் BPCL மூலம் 2 ஆயிரத்து 51 கோடி ரூபாய் அரசுக்கு லாபம் கிடைத்துள்ளது. இந்த அளவுக்கு லாபகரமாக செயல்படும் நிறுவனத்தை விற்க வேண்டிய கட்டாயம் என்ன வந்தது?

தனது நண்பர்களான பெருநிறுவன அதிபர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற பிரதமர் மோடி இதுபோன்ற முடிவுகளை எடுக்கிறாரா? என சுர்ஜிவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories