இந்தியா

கேரளாவில் மீண்டும் பரவிய கொரோனா:  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு பாதிப்பு!

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு 39 ஆக அதிகரித்துள்ளது. 

கேரளாவில் மீண்டும் பரவிய கொரோனா:  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு பாதிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகின் மிகப்பெரிய ஆட்கொல்லி வைரஸாக உருமாறியிருக்கிறது கொரோனா வைரஸ் (கோவிட்-19). இதுவரை சீனாவில் மட்டும் இந்த வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சுமார் 60 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த கொரோனா வைரஸால் மக்கள் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இத்தாலியில் இருந்தும், துபாயில் இருந்தும் வந்த டெல்லி, தெலங்கானாவைச் சேர்ந்த இருவருக்கு முதலில் கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டு, தனிப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே இத்தாலியில் இருந்து வந்த மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

கேரளாவில் மீண்டும் பரவிய கொரோனா:  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு பாதிப்பு!

இதனையடுத்து, உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் போது, கடந்த மாதம் 27ம் தேதி ஓமனில் இருந்து சென்னைக்கு கொரோனா அறிகுறியுடன் வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஐசோலேஷன் வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுவரையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34ஆக இருந்த நிலையில், தற்போது 39ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் தெரிவித்துள்ளார்.

5 பேரையும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, அமெரிக்காவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததை அடுத்து அச்சிறுவனுக்கும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது ரத்த மாதிரி ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் பேரில் குணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories